பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.
22எழுகின்ற வேலையில் விடியல் தந்த குளிரில் போர்வைக்குள் காதலாகிறேன் மழை பெய்த நேரத்தில் முழுதாய் நனைந்திருந்த சாலையில் காதலாகிறேன் தூரத்து மேகத்தை அழைக்கின்ற காற்றுடனே மெல்லிய மண் வாசனையில் காதலாகிறேன் யாரென்று தெரியாமல் எனைப் பார்த்து சிரிக்கும் அக்குழந்தையால் காதலாகிறேன் உச்சி மலை அழகினில் வெண்மை விழும் அருவியில் சில்லென்ற காற்றில் காதலாகிறேன் சாலையோர நடையில்… Continue Reading →
53