The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

வாசகர் கவிதைகள்

விலைமாது – வாசகர் கவிதை

ஓர் அமைதியான இருண்ட இரவில் மூனும் தூங்கிய வேளையில் நாளெல்லாம் அஞ்சி நடுங்கி ஆறும் பார்க்காதவண்ணம் ஏழை பிச்சைக்காரி எட்டுமாத தன் பிள்ளைக்கு நைந்துபோன சேலை போர்த்தி பத்திரமாய் பால்கொடுத்தாள். ##### கோவில் குளங்களில் கோபுரங்கள் நீந்துகின்றன. ##### கண்ணகி சிலையை அடையாளமாக சொல்லிவிட்டு காத்திருந்தாள் விலைமாது. ##### ஒளி தொலைந்த இரவுகளில் வழி மறந்த… Continue Reading →

0

நெருடல் – வாசகர் கவிதை

சில ஆண்டுகள் இருக்கும் சௌந்தர் அண்ணனை பார்த்து… எங்கிருந்தோ ஓடி வந்து பக்கத்து வீட்டு கண்மணி அக்காவை பற்றி விசாரித்தார்: கண்மணி அக்கா சௌந்தர் அண்ணனின் கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்திருப்பது பற்றி அவள் வீட்டில் சொல்லிருக்கக்கூடாது என்று இப்போது தோன்றுகிறது… – துரை சந்தோஷ் புதுக்கோட்டை

0

சின்னஞ்சிறு மின்னல்கள்

பேசும் தயக்கத்திற்கும் பேசா தாகத்திற்கும் இடையே தினம் சிக்கி திணறி மூர்ச்சையாகி உனது நினைவொன்றே நிதர்சனமென நில்லாமல் தள்ளி செல்கிறேன் வாழ்வின் வழிகளை வலியோடு ———— சுற்றி உள்ள நட்பிடம் எல்லாம் சுழன்று ஆடி களைத்து விட்டு எச்சம் உள்ள மிச்ச நேரத்திற்கு கை கோர்க்க கொஞ்சம் மென்மழையை வர சொல்லேன் என்று மேகத்திற்கு தூது… Continue Reading →

78

சொல்ல மறந்த கதை!!

-ஒரு சாமானியனின் குரல் பதினாறோ பதினேழோ வயதிருக்கும்முதன்முறையாக இங்கு வந்தப்பொழுது!ஆணும் அழுவான் எனமுதன்முறையாக அறிந்தேன்!அவனின் கதறல்நெஞ்செல்லாம் என்னவோ செய்திற்று!காற்றில் கரைந்துநாசித் துவாரத்தை தீண்டிச் சென்றஅந்த நாற்றம் குடலை பிரட்டிற்று!அவ்வப்பொழுது விரைத்துஎழும் எலும்பினை பார்த்துஉடல் நடுங்கிற்று!அசராமல் அதனைஓங்கி அடிக்கும் அப்பாவை பார்க்கஆச்சரியம் கூடிற்று! இதோ இருபது ஆண்டுகள் ஆயிற்றுஎன் அப்பாவாய் நான் மாறி!இனியேதும் அழுகுரல்நெஞ்சை அடைக்கவில்லை!விரைத்தெழும் எலும்பேதும்… Continue Reading →

26

அகரம் முதல் நீ – வாசகர் கவிதை

அழகே அறியாய், அகத்தில் நிறைத்தேன்  அமிழ்தே தரினும் அகலத் துணியேன்.  அலையில் சுழன்று ஆழியில் தொலைந்த  அசையும் கொடியுடை ஆர்கலி கலனென  அதரச் சுழிவில் இதயம் தொலைத்தேன்.    ஆடிடும் மயிலில் கூடிடும் அழகை  ஆடையிற் வரைந்து சூடிடும் ரதியே,  ஆதவன் கதிரெழும் காலையில் அனுதினம்  ஆம்பல் மலரென அகத்திலே மலர்ந்தாய்.  ஆதலால் தேனதைத் தேடினேன் உன்னிடம்!    இனிய குரலில் ஒருசொல் உரைப்பாய்.  இமயச் சரிவில் இடறி விழினும்  இமையா துணிவு நெஞ்சம் உறைந்தும்,  இதலிற் சிரிப்பை இமைகள் காணின்  இதயத் துடிப்பும் கொஞ்சம் குறையும்.    ஈரோ முதலோ எதுவென் றறியேன்.  ஈட்டிய துணிவெலாம் உன்முன் காணேன்.  ஈரிமை சிமிட்டிய சிறுநொடி போதும்,  ஈட்டியில் தாக்குண்ட எளியவன் நானே!  ஈசல் போலே துடிப்பதை அறியாய்.    உன்னிதழ் உதிர்க்கும் ஒருசொல் போதும்  உதிரத்தில் சோர்ந்திட்ட அணுக்களும் மீளும்.  உன்மொழி கேட்ட சிலகணம் மீண்டும்  உயிர்வரை கேட்டிட ஒருவரம் வேண்டும்.  உலகம் நீயே, ஒப்புதல் தாராய்!      –ராஜேஷ்வர் இளங்கோவன் குளித்தலை, கரூர்

49

எழு மகனே – வாசகர் கவிதை

தொண்டையில இறங்குது தோத்துப்போய் திரும்புது- என் மண்டையெல்லாம் வலிக்குது மகனே என்னாச்சி உருண்டு படுத்தாலும் தூங்கமாட்டியே சுருண்டு படுத்தாயே சோகம் தாங்கலா ஆத்தா கண்ணுலா ஈரம் கட்டுது அப்பன் நெஞ்சிக்குள்ள அணுகுண்டு வெடிக்குது எங்கபோச்சி உஞ்சிரிப்பு ஆடிப்போச்சி எந்துடிப்பு சக்கரங்கட்டிய காலுக்கு வேகத்தடை எங்கிருக்கு உண்டது எதுவுமே உனக்கு ஒத்துக்கிலா உன்ன விட்டு உண்ணவே நாங்க… Continue Reading →

4

புதிய பாதை – வாசகர் கவிதை

அணிந்திருந்த காலணிகள் அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் குன்றுகள்… கலக்கம்-நிறைக் காடுகள்… கூரிய கோரைப்புற்புதர்கள்… குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்… அமர்ந்து அவ்வப்போது அவற்றை அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்; இயலவில்லை. எதனாலெனில் இவைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெப்படியோ முடித்து என் இலக்கை அடைந்தபோதோ என் இரத்த உறவினர்களுமே… Continue Reading →

84

அவள் பெயர் – வாசகர் கவிதைகள்

அவள் பெயர் திருவிழா கூட்டத்திலும் கண்டுபிடித்துஎன்னைப்பற்றி நூறு கேள்விகள் கேட்டுஎன் மகளுக்கு நூறு முத்தம் கொடுத்த சுமதி கடைசிவரை என் மகளின் பெயரை கேட்கவேயில்லை… -துரை சந்தோஷ் மனைவி இல்லா முதுமை நதியோடு குளிர்காற்றுநயனம் பேச ,காணும் போது…அவள் நாசியோடு தூயசுவாசம்தவழ்ந்த நினைவு கொண்டேன்!! பனியில் நனைந்த பூங்காவில்பூக்கள் படர்ப்பைக் காணும் போதுஅவள் மேனியில் என்… Continue Reading →

13

இன்னும் அந்த கவிதை – வாசகர் கவிதை

இன்னும் அந்த கவிதை மீதமிருக்கிறது.. முழுவதுமாய் முடித்துக் கொள்ள ரோஜா இதழின் ஸ்பரிசம் தேவைப்படுகிறது.. வெண்ணிலவின் சந்நிதானத்தில்தான் அந்த கவிதை தொடங்கப்பட்டது.. வெண்முத்தின் எழுதுகோல்தான் அத்தனைக்கும் உதவியாய் இருந்தது.. அமிர்தத்தின் எல்லைக்குள் அந்த கவிதை இனிமையின் ராஜனாய் வலம்வருகிறது.. ஆகாச கோட்டையில் அது பெளர்ணமியாய் பதிந்து கிடக்கிறது… காற்றின்சாலையில் அந்த கவிதை தென்றலாய் அரியாசனித்துக் கெளரவமாய்… Continue Reading →

1

நானெனக்கொள்ளடி – வாசகர் கவிதை

காற்றிலுன் சேலை அகப்பட்டதெனில், வீசுவதங்கு என் மூச்செனக்கொள்ளடி நாற்றிலுன் கைத் தீண்டியதெனில், விளைவது அனைத்தும் நானெனக்கொள்ளடி சேற்றிலுன் பாதம் பட்டதெனில், வளைந்தோடும் நதியாவும் நானெனக்கொள்ளடி நேற்றிலுன் உறக்கம் விடுபட்டதெனில், வந்தநினைவுகள் யாவும் எனதெனக்கொள்ளடி மாற்றுண்டு பசிப்பிணிக்கும் மருந்தெனில், உன்நினைவேயன்றி வேறேதடிக் கண்ணே! — மணி

4

© 2021 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்