ஒரு காட்டன் சேலை
அல்லது சுடிதார்
இல்லை லெக் கிங்ஸ்
போட்டு கொள்ள ஆசை
இரட்டை ஜடை
அல்லது
குதிரை வால்
போட்டு கொள்ள தான்
ஆசை
அதிக முத்துக்கள் இல்லாமல்
கொலுசு போட
இஷ்டம் எனக்கு
மல்லிகைக்கு பதில்
ரோஜா சூடி கொள்ள
அனுமதியுங்கள்
பிசாசு என்ற
என் பெயருக்கு பதில்
உங்கள் பெயரை
வைத்து கொள்ள தான்
விருப்பம்.

– துரை சந்தோஷ்

புதுக்கோட்டை

0