The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Author

Murugan D

எதுவுமில்லை – வாசகர் கவிதை(74)

நீ துாரிகையா நொடிகளில் வண்ணங்கள் தருகிறாய் உன் புன்”நகை”யால் ஆங்காங்கே சில சேதாரங்கள் நீ ஈர்க்கிறாய் நான் ஈர்க்கப்படுகிறேன் எல்லாம் விதிப்படி உன் புன்னகைக்கு பதில் புன்னகை மட்டும் தந்துவிட்டு கடந்து செல்கிறேன்.. இதைத் தவிர நமக்குள் நிகழ எதுவுமில்லை.. –சுடர் (கீதா) Chennai

14

மகளின் மகப்பேறு – வாசகர் கவிதை(75)

தெருவைத் தீர்த்து முடிக்கும் அவளது கோலங்கள் இருக்கும் இடத்தில் 3 புள்ளி 3 வரிசை கோலம் அவளை வரவேற்றது அந்தி வானம் சாஞ்சதுமே அரட்டை அடிக்கும் அந்த தோழிகளும் அங்கில்லை அவள் கூந்தல் ஏறி முக்தி அடையும் மல்லிகையும் அங்கில்லை பள்ளிப் பருவ பாதுகாவல் லேடிபர்டூம் அங்கில்லை பருவமெய்து படுத்திருந்த குச்சுக் குடிசையும் அங்கில்லை அவள்… Continue Reading →

2

ஏன்! – வாசகர் கவிதை(76)

ஆசைப்பட்டேன் அவசரப்பட்டேன் அவதிபட்டேன் இவை அனைத்தும் இருபதில்யேன்! ஈதல்செய்தேன் இரக்கப்பட்டேன் இன்பம்பெற்றேன் இவையனைத்திலும் அளவை மீறினேன்! ஊக்கம்பெற்றேன் உடைந்தேன் உணர்ந்தேன் என்னிடமுள்ள என்னை இழந்தேன்! அனைத்தும் அறியா என்று அறிந்தேன் என்னுடைய வாழ்வை வாழத் துணிந்தேன். -நான் நானாக (சி. சிவஞானவேல் ) Madurai

7

காதலென்றால் என்ன? – வாசகர் கவிதை(73)

காதலென்றால் என்ன?கேள்வி வந்தது எனக்கு! சமுத்திரத்தின் உப்பு நிறைந்த உடலில்சதைகிழிக்கும் ஊசியாய்தித்திக்க நுழைகிறதே நதிஅது காதல்! கிட்டாத காலமெனத் தெரிந்தும்எட்டாத் தூரத்திலிருந்து விழும் ஒற்றைத் துளிக்காய்கோடையில் ஏங்கி நிற்கிறதே மண்அது காதல்! ஊரை விழுங்கும் தெம்பிருந்தும்சிறு தீக்குச்சியின் ஒற்றைத் தொடுதலுக்காய்அடங்கி நிற்கிறதே நெருப்புஅது காதல்! புயலடித்து ஓய்ந்தபின்காலொடிந்து வீழ்ந்த கிழட்டு மரத்தின்உச்சி வருடியதே நொண்டித் தென்றல்அது… Continue Reading →

27

கள்ளிக்காடு – வாசகர் கவிதைகள்(71&72)

கள்ளிக்காடு வறண்ட வாசம் தேடி போகும் காக்கைக்கு கூடாரம்…! அழுகை தெரியாத ஆற்றுப்படுகை..! பூழுதியை தொட்டு ருசிக்கும் புண்ணிய பூமி..!! பட்டாம்பூச்சி இடம் பெயர்ந்து வானவில்லின் கடைசி நிறத்தை விட்டு போனது வறட்சி..!!   — நா.லோகேஸ் ஈரோடு       ஒன்றேபோல பொழுது புலர்ந்தது புத்தம்புது நாளாய் பொன்கதிர் எழுந்தது புவனம் தழைக்க… Continue Reading →

4

அவள் – வாசகர் கவிதை(70)

தவறென்று தெரியும் போது தட்டிக் கேட்க முற்படுபவள். தனக்கென இடம் பிடிக்க தடைகள் பல கடப்பவள். துச்சமென கருதிய இடத்தில் துணிந்தே நிற்பவள். உடைந்து போகாமல் உயர்ந்து செல்ல முயல்பவள். அன்புக்கு மட்டும் அடங்கி போக முற்படுபவள். வேதனைக்கும் வேடிக்கை காட்டி வென்று எழுபவள். கற்று தேர்ந்து கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள். நம்பிக்கை கொண்டு… Continue Reading →

12

பங்குனி உத்திரம்‌ – வாசகர் கவிதை(69)

பங்குனி உத்திரமாம்‌! பட்டு மேனியனாம்‌ பழனி ஆண்டவனாம்‌ முருகனின்‌ விழாவாம்‌! தேரிலே ஊர்வலமாம்‌ பக்தர்கள்‌ கூட்டமாம்‌ மாலைகள்‌ போட்டனவாம்‌ தீர்த்தங்கள்‌ எடுத்தனவாம்‌ மாடுகள்‌ பூட்டினவாம்‌ பழனிக்கு பயணமாம்‌ நலிந்த உடலாம்‌ ஓடும்‌ வேகமாம்‌ பாத யாத்திரையாம்‌! வாருதய்யா மக்ககூட்டமாம்‌ முருகனைக்‌ காணவாம்‌ மலையில் மணியாம் அரோகரா கோஷமாம்‌ கணீரென ஒலிக்குமாம்‌ மயில்கள்‌ எல்லாம்‌ மலைக்கு பறந்துவருமாம்‌… Continue Reading →

2

பேய் – வாசகர் கவிதை(68)

ஒரு காட்டன் சேலை அல்லது சுடிதார் இல்லை லெக் கிங்ஸ் போட்டு கொள்ள ஆசை இரட்டை ஜடை அல்லது குதிரை வால் போட்டு கொள்ள தான் ஆசை அதிக முத்துக்கள் இல்லாமல் கொலுசு போட இஷ்டம் எனக்கு மல்லிகைக்கு பதில் ரோஜா சூடி கொள்ள அனுமதியுங்கள் பிசாசு என்ற என் பெயருக்கு பதில் உங்கள் பெயரை… Continue Reading →

31

தாகம் – வாசகர் கவிதைகள் (66 & 67)

உலர்ந்திருந்தயென் உதடுகளுக்கு ஓத்தடமாயுன் ஈர உதடுகள் தணிந்திருந்த தாகத்தினை கூட்டியதே தவிர குறைக்கவில்லையடி… — தனசேகர் கணேசன் கடலூர் தமிழ்க்கழனி எள்ளும், நெல்லும் தமிழ்க்கழனி மேற்செல்லும்! பசும்புல்லும், பஞ்சுமண்ணும் அக்கழனி கொள்ளும்-பெரும் கல்லும், கானக முள்ளும் வரப்பென நில்லும்! கள்ளும் தேன்சொல்லும் விளைச்சலென அள்ளுமே! — இர.மணிகண்டன் வேலூர்

1

போராட்டம் – வாசகர் கவிதைகள்(65)

———————– களங்கள் மட்டுமே மாறும்… போர்கள் தீருவதில்லை கொல்லவும் ௯டாது கொல்லப்படவும் கூடாது சீறும் நாகங்களுடன் விந்தை விளையாட்டு… ஆயுதமும் நானே கேடயமும் நானே.. விதியின் விதிமுறைகள்.. வலிகளை வார்த்தைகளாய் வார்த்தெடுக்கிறேன் காயங்களாய் எனக்கு கவிதையாய் உனக்கு… – சுடர் கீதா

65

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்