நீ துாரிகையா
நொடிகளில்
வண்ணங்கள் தருகிறாய்

உன் புன்”நகை”யால்
ஆங்காங்கே
சில சேதாரங்கள்

நீ ஈர்க்கிறாய்
நான் ஈர்க்கப்படுகிறேன்
எல்லாம் விதிப்படி

உன் புன்னகைக்கு
பதில் புன்னகை மட்டும்
தந்துவிட்டு
கடந்து செல்கிறேன்..

இதைத் தவிர
நமக்குள் நிகழ
எதுவுமில்லை..

–சுடர் (கீதா)
Chennai

0