உலர்ந்திருந்தயென்
உதடுகளுக்கு
ஓத்தடமாயுன்
ஈர உதடுகள்
தணிந்திருந்த
தாகத்தினை
கூட்டியதே தவிர
குறைக்கவில்லையடி…


தனசேகர் கணேசன்
கடலூர்


தமிழ்க்கழனி

எள்ளும், நெல்லும் தமிழ்க்கழனி மேற்செல்லும்!
பசும்புல்லும், பஞ்சுமண்ணும் அக்கழனி கொள்ளும்-பெரும்
கல்லும், கானக முள்ளும் வரப்பென நில்லும்!
கள்ளும் தேன்சொல்லும் விளைச்சலென அள்ளுமே!


இர.மணிகண்டன்
வேலூர்

0