மௌனங்களின் நிழல்களிலே
கசிந்துருகும் ஓர் பிம்பம்
நேற்றைய நாட்களின்
தேடல்களில் ஒளிந்து கொண்டிருக்கும்

பக்கங்களை புரட்டுவதைப் போல்
வருடங்களை நகர்த்திச் சென்று
அறிந்தவர்களை ஆராய்ந்திட
புன்னகையும் ஓர் சிறு துளி கண்ணீரும்
உளவாடி கொண்டிருக்கும்

கோர்வையாய் இல்லாமல்
காலக்கோட்டில் சிதிலடமைந்து
காட்சிகள் யாவும் தன்னை
வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

நிலை நின்று ஓர் நிமிடம்
நிசப்தத்தில் விழி வைத்தால்
செவி கேட்கும் சப்தத்தில்
நிறைந்திருக்கும் வார்த்தைகளின்
அர்த்தங்கள் புலப்படும்

இறந்தவர்களின் கையெழுத்தை
வாசித்ததுண்டா ?

மீள்வாசிப்பு செய்யுங்கள்…

251