என் உயிர் நாடிடும் சிவ தாண்டவம்

பூவை நோக்கும் கண்களிலே
அனல் கோபம் வீசிடும் தாண்டவம்

சிவனே மாயனே
என் சிந்தையில் சிறந்தவனே

இராக தாளங்களினூடே எந்தன்
இரணங்களை ஆற்றுகின்றேன்
இறையே நின் பெயரை ஓதுகின்றேன்

ஒற்றை மனதினிலே பாயும்
ஓராயிரம் அம்புகளையும்
உடைத்தெறிந்து ஆடுகின்றேன்
உமையனே நீ என்றோர் துணையுடன்

இதழ்கள் புரியும் இளநகை உனக்காய்
இமைகளின் ஈரத்தில் உன் முகமே தெரிய
சினுங்கிடும் பாத சலங்ககைகளுடன்
சிவனே உனக்காய் ஆடுகின்றேன்

ஒப்பற்ற ஓர் அமைதி என் மனதை
ஒருங்கே சூழ்ந்து ஆளவே – சடையனே
சகிதமும் என்னுடன் சலங்கை யோசையுடன்
சதை கொண்ட உயிராய் நீ ஆடிட வேண்டும்

மாலைநேர செஞ்சுடர் ஞாயிருடன்
மோகங் கொண்டு ஆடச் செய்தேன்
நளினமாய் என் மென் இடையசைத்து
நந்தகுமாரனே நின்னுடனே ஆடிட வேண்டும்

50