பிணம் தின்னும் கழுகுக்கும்
நான்
பெருமை பாட நினைக்கிறேன்

அழகென உலகம் பார்க்க
திசைகள் கொட்டி கிடக்குது
மனதையும் பறவையாக்கி
பறந்து செல்ல வழிவிடு

என்ன குறை கண் பட்டதோ
முழங்காலில் மோகம் வெடிக்குதா

நிமிர்ந்தா குற்றம மோனு
கூட்டம் தொடர்ந்து மிரட்டுது

சிரித்தால் சபலம் காட்ட
முறை த்தால் வெறிய காட்ட
எங்கள் உடல் உனக்கு
பாசியாற்றும் தீனியா

அழுகையும் கேட்கவில்லை
கதறலும் கேட்கவில்லை
தனிவரும் பெண்ணவலின்
கொலுசு மட்டும் கேட்கிறதா

மானம் கெட்டு கோரம் செய்யும்
கண்ணியத்தின் மூத்தவரே
எங்கள் மனம் கத்தி சொல்லும்
கதறல் கவி கேட்கிறதா

ரத்தச்சொட்டு சிந்த சிந்த
போதாதா பைத்தியத்தின் பித்தாட்டம்
இன்னும் என்ன வேண்டுமென
மிருகம் சலிக்க ஆடிவிட்டாய்

கீழறுக்க போதாம
கழுத்தறுத்து என்ன கண்ட
பேதை என்ன செய்தாலோ
புரியாது மடித்துவிட்டாய்

பெதும்பையும் குலைத்ததாச்சு

மங்கை மகள் மாண்டாச்சு

மடந்தையும் மிதிப்பட்டே
அரிவையும் அழிச்சாச்சு

தெரிவையும் தின்னப்பின்னே
பேரிளமும் பற்றவில்லை

குழவி என்ன செய்தது உன்னை
கிழவி வரை கிழிச்சிறுக்க

உந்தன் இரை ஆவதற்கு
பிணம் தின்னும் கழுகிற்கு
இரையாய் மடிவேனே

— சதீஷ்வரன்
சென்னை

1