கள்ளிக்காடு
வறண்ட வாசம் தேடி போகும் காக்கைக்கு கூடாரம்…!

அழுகை தெரியாத ஆற்றுப்படுகை..!

பூழுதியை தொட்டு ருசிக்கும் புண்ணிய பூமி..!!

பட்டாம்பூச்சி இடம் பெயர்ந்து

வானவில்லின் கடைசி நிறத்தை விட்டு போனது வறட்சி..!!

 

— நா.லோகேஸ்

ஈரோடு

 

 

 

ஒன்றேபோல

பொழுது புலர்ந்தது புத்தம்புது நாளாய்

பொன்கதிர் எழுந்தது புவனம் தழைக்க

உக்ரைன் உக்கிர உறைகுருதி கண்டும்

இலங்கையின் இல்லாமை இன்னல் கண்டும்

பெருந்தொற்று மீட்டுரு மிரட்டக் கண்டும்

அகதிகள் ஆனவர் ஆறாத்துயர் கண்டும்

இன்றும் ஒன்றேபோல் எல்லாம் கண்டும்

விலைபோல் ஏறியதே விண்ணில் வெங்கதிர்!

 

— வடிவேலு

மதுரை

 

 

 

 

 

0