அடிக்கடி கனவில் வருமந்த
மலையுச்சிக் கோவிலும்
சரிந்திறங்கும் அருவியும்
கிளையமர்ந்த ஒற்றைக்குயிலும்
தொந்தரவெனக்கு…

அருவிக்கு குயிலின் குரல் …
குயிலின் கூவலோ பேரிரைச்சல்…
காற்றிலாடாத மணியோடு கோவில் மட்டும் நிசப்தமாய்,
மிகத் தொந்தரவெனக்கு…

இரையும் குயிலையும்
பாடும் அருவியையும் தாண்டி
பேரமைதிக் கோவில்தான்
மிக மிகத் தொந்தரவெனக்கு…

அமைதி ,அமானுஷ்யமாகும்போது
அத்தனையும் தொந்தரவு…
அமைதியாயிருக்கும் அமைதி பெருந்தொந்தரவு…
ஒலி வேண்டும் உலகிலிருக்கிறேன்…
யாரேனும் பேசுங்கள்…

– சக்தி மீனாட்சி
மதுரை

3