சில ஆண்டுகள் இருக்கும்
சௌந்தர் அண்ணனை பார்த்து…
எங்கிருந்தோ ஓடி வந்து
பக்கத்து வீட்டு
கண்மணி அக்காவை
பற்றி விசாரித்தார்:
கண்மணி அக்கா
சௌந்தர் அண்ணனின்
கருப்பு வெள்ளை
பாஸ்போர்ட் சைஸ்
புகைப்படத்தை
வைத்திருப்பது பற்றி
அவள் வீட்டில்
சொல்லிருக்கக்கூடாது
என்று
இப்போது தோன்றுகிறது…

– துரை சந்தோஷ்
புதுக்கோட்டை

18