பேசும் தயக்கத்திற்கும்

பேசா தாகத்திற்கும் இடையே

தினம் சிக்கி திணறி மூர்ச்சையாகி

உனது நினைவொன்றே நிதர்சனமென நில்லாமல் தள்ளி செல்கிறேன்

வாழ்வின் வழிகளை வலியோடு

————

சுற்றி உள்ள நட்பிடம் எல்லாம்

சுழன்று ஆடி களைத்து விட்டு

எச்சம் உள்ள மிச்ச நேரத்திற்கு

கை கோர்க்க கொஞ்சம் மென்மழையை

வர சொல்லேன் என்று

மேகத்திற்கு தூது விடும் சின்னஞ்சிறு மின்னல்கள்

— லஷ்மி பிரியா

78