ஓர் அமைதியான
இருண்ட இரவில்
மூனும் தூங்கிய வேளையில்
நாளெல்லாம்
அஞ்சி நடுங்கி
ஆறும் பார்க்காதவண்ணம்
ஏழை பிச்சைக்காரி
எட்டுமாத தன் பிள்ளைக்கு
நைந்துபோன சேலை போர்த்தி
பத்திரமாய் பால்கொடுத்தாள்.

#####

கோவில் குளங்களில்
கோபுரங்கள் நீந்துகின்றன.

#####

கண்ணகி சிலையை
அடையாளமாக சொல்லிவிட்டு
காத்திருந்தாள் விலைமாது.

#####

ஒளி தொலைந்த இரவுகளில்
வழி மறந்த பறவைகள் நட்சத்திரம்

– கெ ம நிதிஷ்
பாண்டிச்சேரி

28