———————–
களங்கள் மட்டுமே
மாறும்…
போர்கள்
தீருவதில்லை

கொல்லவும் ௯டாது
கொல்லப்படவும் கூடாது
சீறும் நாகங்களுடன்
விந்தை விளையாட்டு…

ஆயுதமும் நானே
கேடயமும் நானே..
விதியின் விதிமுறைகள்..

வலிகளை
வார்த்தைகளாய்
வார்த்தெடுக்கிறேன்

காயங்களாய் எனக்கு
கவிதையாய் உனக்கு…

– சுடர் கீதா

3