The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

மீள்வாசிப்பு செய்யுங்கள்

மௌனங்களின் நிழல்களிலே கசிந்துருகும் ஓர் பிம்பம் நேற்றைய நாட்களின் தேடல்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பக்கங்களை புரட்டுவதைப் போல் வருடங்களை நகர்த்திச் சென்று அறிந்தவர்களை ஆராய்ந்திட புன்னகையும் ஓர் சிறு துளி கண்ணீரும் உளவாடி கொண்டிருக்கும் கோர்வையாய் இல்லாமல் காலக்கோட்டில் சிதிலடமைந்து காட்சிகள் யாவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் நிலை நின்று ஓர் நிமிடம் நிசப்தத்தில் விழி… Continue Reading →

319

விடிந்ததும் சிரிக்கிறேன் – Chernobyl Effect

விடிந்ததும் சிரிக்கிறேன் அதுவரை அழுகிறேன் ஆறாத துயரங்கள் அணுவினில் கலந்திருக்கையில் யாதும் அறியாமல் தவிக்கிறேன் வினையூக்கியாய் இவ்விரவது இருளினை ஊற்றுகையில் கண்ணீரின் நிறங்கள் மாறுவதை என் குறிப்பேட்டில் எழுதி கொள்கிறேன் நேற்றுவரை தென்றல் என்றவை இன்று முதல் பாதகமென்பதை உணர்ந்ததால் சொல்கிறேன் விடியும் வரை அழுகிறேன் விழியினில் நிறைந்து வெளிவருந் சிறு துளியின் பாரமது ஒவ்வோர்… Continue Reading →

231

முழுதாய் முத்தமாய்…

அத்தனை வேகமாகவா கடந்து விடும் அந்த நொடி யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை என்றதும் மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை விலக்கி விட்டு உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை அடைந்து விட்டு எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள் பதிந்து விட சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள் ஏற்படுத்திய மாயம் நொடியினும் குறைந்த… Continue Reading →

199

அகழ்வாராய்ச்சி

இருள் கூடியிருக்கும் அறையினில் அமைதியாய் சில பேச்சுக்கள் அளவாய் விசாலமாய் புதை படிமங்களை யாதென்று தெரியாமல் சிதைத்திட கூடாதென்று மெதுவாய் தூசிகள் அகற்றுவதாய் அந்த பேச்சுக்கள் நினைவுகளை கண்டறிகின்றன பதின்ம வயதுகள் சிதிலமாய் அதில் சில தன்மை மாறாமல் சிதறிய வண்ணம் கிடைக்கின்றன கீரல்களாய் இருக்கும் இடத்தில் தடயங்கள் தெரிகின்றன அதில் சில முகங்கள் தோன்றி… Continue Reading →

160

என் சிந்தையில் அவள்….

அவள்

வார்த்தைகளின்
ஒலி வடிவத்தை
வற்ற செய்தவள்

பட படப்பாய் என்றும் என்
படர்ந்த மார்பினில் ஓர்
இறுக்கத்தை தருபவள்

சிந்திக்க சிந்திக்க
இதழினில் ஈரப்பதம் குறைந்திட
இரவெல்லாம் விழிக்க செய்பவள்

323

விதியானவன்

இது விதியின் விளையாட்டு
விழிகள் ஏற்க இயலா பெரு – வெளிச்சத்தின்
இருள் தெளிக்கும் விளையாட்டு

இருண்டிடாத பகலில் கண்ட கனவுகளை
இருள் போர்த்தி மறைக்கும் – விதி
யவன் விளையாட்டு

இறுகி பிணைந்து கோர்த்த கைகளை
சட்டென விலக்கி விட்டு – சிரிக்கிறான்
தரையினில் துவள்வதை கண்ணார இரசிக்கிறான்

166

காலையும் காதலும் மழையும்

காலையில் எழுந்ததும் மழை சத்தம்
பிசிறு பிசிறாய் சன்னலின் வழியே
துளிகளாய் இலைகளிடை தங்கி
மண்ணின் மடியினிலே வீழ்ந்து சிதறி
புதிதாய் இனம் புரியா மோகத்தினை

தெளித்திடும் இக்காலை வேலையில்
பூக்கள் இல்லா மரமும்
மழைத்துளிகளை தாங்கி கொண்டு
தாய்மையின் பூரிப்புடன் நெகிழ்ந்திட

140
1 2 3 14

© 2023 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்