The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 3 of 14

நின்னை தேடியே

என் தோள் சாய்ந்து நீ அமர்ந்திருப்பதாய்
சப்தங்கள் எல்லாம் அமைதியாய்
நின் மூச்சாய் மாறி இசைப்பதாய்
வான் பறக்கும் ஓர் சோடி பறவை
சன்னல் வழி நம்மை காண்பதாய்

14

இலை விழும் துளியொன்று

இலை விழு துளியொன்று கனத்து நுனி வந்து நுனி யதன் அரவணைப்பில் சற்றே மேனிப் பருத்து – கீழ் நோக்கி மெல்லியவளின் கன்னம் விழ மெல்லியவள் நளினம் கொண்டு துளியதை துடைத் தெறிய துடைத்தெறிந்த துளியது பெண்மையவள் கூந்தலுரசி சிதற பரவியது ஈரப்பதம் நதியதன் கரையோரம் கொண்டதொரு ஓசை போல் சிலிர்த்தது கானங்கள் துளியது கூட்டத்துடன்… Continue Reading →

30

யாரும் வேண்டாம்… யாழும் வேண்டாம்… வேண்டியதெல்லாம் நீ மட்டும்…!

இவன் பார்த்தநொடியே அவள் தாயாகிறாள்… இவன்… இறுக்கமாக அணிந்த புன்னகை அவளை ஏதோ செய்கிறது…  இவன்…  இப்புன்னகையை தவிர வேறில்லை அவளுக்கு பரிசளிக்க…  இவன்…  அள்ளி அனைக்க கள்ளப் பார்வை வீசிய கள்ளமில்லா இளந்தென்றல்…  இவன்… கண்டிபான கண்ணனே… கண்டதும் கண்களால் பிணையமாக்கினான்… இவன்… அயனவனின் பிள்ளை தானம்மா… அயலவன் என்று விட்டுச்செல்லாதே..  இவன்… தவறி… Continue Reading →

5

இவள் புதியவள் அல்ல

புழுதி விழும் சாலையிலே புன்னகை தெளிக்கும் பெண்ணொருத்தி புதிதாய் தான் தெரிகின்றாள் – தினம் புதிதாய் பிறக்கும் ஒவ்வோர் நாளும் தெளிவான அவள் பேச்சுக்களில் தெளிந் சிந்தனை அது ஓங்கியிருக்கும் தொன்மையதன் சிறப்பும் அறிவும் – செய்யும் தொழிலதற் தன்மைதனையும் சிறப்பாய் அறிந்திருக்கிறாள் இதல்லவா பெண்ணியம் இதல்லவா பெண்ணியத்தின் கூறு என்றவள் ஏனோ அதிகம் கூறுவதில்லை… Continue Reading →

6

யாதும் அன்பே யாவரும் கேளிர்

எது காதல் எது நட்பு எது பாசம் என்று தேடி ஏது காதல் ஏது நட்பு ஏது பாசம் என்று யாவற்றையும் தொலைத்து இது காதல் இது நட்பு இது பாசம் என்றுணர்கையில் வாழ்க்கையின் எல்லையில் இருப்போம் இதுதான் அன்பை வெளிப்படுத்தும் வழி இது தான் அன்பு என்று நாம் பல முடிச்சுகளை போட்டு கொண்டே… Continue Reading →

10

காதலாகிறேன்

எழுகின்ற வேலையில் விடியல் தந்த குளிரில் போர்வைக்குள் காதலாகிறேன் மழை பெய்த நேரத்தில் முழுதாய் நனைந்திருந்த சாலையில் காதலாகிறேன் தூரத்து மேகத்தை அழைக்கின்ற காற்றுடனே மெல்லிய மண் வாசனையில் காதலாகிறேன் யாரென்று தெரியாமல் எனைப் பார்த்து சிரிக்கும் அக்குழந்தையால் காதலாகிறேன் உச்சி மலை அழகினில் வெண்மை விழும் அருவியில் சில்லென்ற காற்றில் காதலாகிறேன் சாலையோர நடையில்… Continue Reading →

57

இனியவை யாவும்…

காட்சிகள் இனிது… அதில் கற்பனைகள் இனிது… கானல் இனிது… அதில் களிப்பூட்டும் கதிரவன் இனிது… காரிருள் இனிது… அதில் கவித்துவம் இனிது… காடுகள் இனிது… அதில் கிளியோசை இனிது… காதல் இனிது… அதில் காரணங்கள் இனிது… காயங்கள் இனிது… அதில் கடமைகள் இனிது… கூட்டங்கள் இனிது… அதில் கண்கள் விளையாடும் கண்ணாமூச்சி இனிது… கேட்கும் குரல்கள்… Continue Reading →

5
1 2 3 4 5 14

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்