யாரும் வேண்டாம்... யாழும் வேண்டாம்... வேண்டியதெல்லாம் நீ மட்டும்...!

இவன் பார்த்தநொடியே அவள் தாயாகிறாள்…
இவன்… இறுக்கமாக அணிந்த புன்னகை அவளை ஏதோ செய்கிறது… 
இவன்…  இப்புன்னகையை தவிர வேறில்லை அவளுக்கு பரிசளிக்க… 
இவன்…  அள்ளி அனைக்க கள்ளப் பார்வை வீசிய கள்ளமில்லா இளந்தென்றல்… 
இவன்… கண்டிபான கண்ணனே… கண்டதும் கண்களால் பிணையமாக்கினான்…
இவன்… அயனவனின் பிள்ளை தானம்மா… அயலவன் என்று விட்டுச்செல்லாதே.. 
இவன்… தவறி விழுந்த தாழம்பூ… தாராள தவவரம்… திகட்டாத தேன்… திருட வந்த தாகம்… 
இவன்… இயற்கையில் இருவரின் இயல்பாக இல்லாது போனாலும் இனி இயல்பாக இவர்களின் சுவாசமாவான்…
இவன்… இவன்தான் வேண்டும் என்று அவள் அவனைப் பார்க்க… 
அவன்… அவளின் விழியசையும் முன் அவள் கரம் பற்றினான்… 
அவளும் அவனும்… ஆணாக பெண்ணாக… இம்முறை தந்தையாக தாயாக… இவனை பெறும் பெற்றோராக…
என்றோ எங்கோ படித்தது அசரீரியாக உள்ளத்தில் ஒலித்தது… ‘பெற்றால் தான் பிள்ளையா…? ‘ 

0