புழுதி விழும் சாலையிலே
புன்னகை தெளிக்கும் பெண்ணொருத்தி
புதிதாய் தான் தெரிகின்றாள் – தினம்
புதிதாய் பிறக்கும் ஒவ்வோர் நாளும்

தெளிவான அவள் பேச்சுக்களில்
தெளிந் சிந்தனை அது ஓங்கியிருக்கும்
தொன்மையதன் சிறப்பும் அறிவும் – செய்யும்
தொழிலதற் தன்மைதனையும் சிறப்பாய் அறிந்திருக்கிறாள்

இதல்லவா பெண்ணியம்
இதல்லவா பெண்ணியத்தின் கூறு
என்றவள் ஏனோ அதிகம் கூறுவதில்லை
ஏதோ பெண்ணியம் என்பது சொல்லில்லை செயலில் என்றறிவாள் போலும்

தான் கடக்கும் சூழ்நிலைகளை பார்வையிலே தந்துவிடுவாள் உயர் பகுத்தாளனிடம்
தரமியக்கும் பார்வை தரும் மூடர்களை அறவே தவிர்த்திடுவாள்

சூழ்நிலை கைதியாய் இவள் தனை சொல்வதில்லை
சூழலை வகைமையாய் கையாளும் சுய உணர் கொண்டவள்

பாரதியோ காந்தியோ ஏனோ பார்த்திராத பெண்ணிவள் – இவள்
அன்புக்கும் அடிமைக்கும் வேறுபாடு உணர்ந்தவள்

அச்சத்தை கொண்டு தன் குறிக்கோள் அடையாதவள் அல்ல
உச்சத்தை நாடும் உள்ள வேட்கை கொண்டவள்

சித்தம் குலைந்து காமம் வெதும்பி வந்த மிருகத்தை
காலணி கொண்டே அடக்கியவள் – ஆம்
உயர் தமிழ் குல பெண்ணிவள்

அழகு தமிழில் சொல்வதென்றால்
இனிமையும் தண்மையும் சேருமின்
இவள் குண ஆகுமின்

ஆம் இவள் புதியவள் அல்ல
நம்முள் நம்முடன் உலவும் உயர் பண்பிணள்

3