சீனதேசத்து வானவளியிலே சீக்குப்பரப்பியைச் சிதறியதாரோ? ஊகான்மாகாண உயிர்வளிதனிலே உயிர்க்கொல்லியை உதறியதாரோ? வேகமாக வளர்ந்துவிட்டோம் விஞ்ஞான அறிவினிலென்ற மோகத்தில் நாங்களெல்லாம் மூழ்கித் திளைத்திருந்தோம் காற்றினில் நோய்பரப்பி நூற்றுக்கணக்கில் உயிர்குடிக்கும் கரோனோவே உன்முன்னால் கர்வத்தை உடைத்தெரிந்தோம் நாசிக் காற்றில் நச்சைக் கலக்கும்முன் யோசித்துப் பார்த்தாயா ஒற்றை நிமிடம் முந்நீர்சூழு் பூமிக்கே முகக்கவசம் தைப்பதற்கு மண்ணில் இல்லைஎந்த மலிவுவிலை கடையும்… Continue Reading →
0தென்கடல் தீண்டிய தென்றலது, இளம் பூவுக்குள் புகுந்திங்கு போகுதடி!! எந்த பூவுக்கும் பாரபட்சம் இல்லையடி!! வண்ணத்திரு எழில் வையகத்துள்-பல நீளக் கதிர்களும் வீசுதடி!! இதில் நிர்க்கதி யாருக்கும் இல்லையடி!! கான குயிலோசசை உணரும் காதில் -ஒரு காதல் இன்பம் ஊறுதடி!! இதில் வயது வரம்பு இல்லையடி!! நீலக் கடலலை வீசிவந்து-எங்கும் நிற்கும் காலைக் கூசுதடி!! இதில்… Continue Reading →
42என்ன செய்யும் எழுத்தென எண்ணிப் பார்த்தேன் எண்ணியதன் முடிவில் ஒன்று தெளிந்தேன் – நமை எண்ணச் செய்வதே எழுத்தென்பதறிந்தேன் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமெனில் கண்ணைக் காப்பதே கலையின் பெருமை பெரியாரின் எழுத்து சுயமரியாதை பேசும் அண்ணலின் எழுத்தில் சமூகநீதி இருக்கும் பகத்சிங்கின் எழுத்தினிலோ புரட்சி இருக்கும் பொதுவுடைமை பேசுதற்கு மார்க்ஸின் எழுத்து வரும் அண்ணாவின்… Continue Reading →
3அறியாமை இருளுக்கு ஆதித்ய ஒளியூட்டி அறிவுக் கேணிதனை அழகுறத் தூரெடுத்து வறியோனும் வித்தகனாய் வாழ்வாங்கு வாழ்ந்திடவே வரமாய்க் கிட்டிய விருட்சமன்றோ நூலகம்! கலாச்சாரப் பறைசாற்றும் இலக்கிய வேர்துவங்கி கணிப்பொறிக் கதைசொல்லும் காலக் கிளைவரை பலாயிரம் நூல்களைப் பதுக்கியுள்ள பொக்கிஷம் பயனுறப் பழகிட்டால் வெற்றியது நிச்சயம்! விழிப்புணர்வு ஒளிதேடி வேறெங்கும் போகாதே வாழ்ந்தோரின் வரலாறு வாசித்திடு வந்திறங்கும்… Continue Reading →
1தளிர்க்கொடியில் எழில்நிறத்தில் நறுவலர்கள் முகிழ்ந்திடவே! மண்பொன்னில் வேரூன்றிய மாதருவின் கிளைகளிலே பசப்பூரும் இலைவிசிறி அதுவளிக்கும் குளிர்வளியும் , தேனரும்பை தீண்டிடவே வண்டுயர்த்திடும் வல்லிசையும் , பிணைந்தநல் தென்றலிலே தேக்கிவைத்த மதுரங்களும் ……!!! வெள்ளிக்கூழ் நீர்சொரியும் முகில்த்தீண்டும் அருவிகளின் முதுகதனில் உதித்தெழும் இளஞ்சிவப்பு இரவியதை இருள்நிறத்து கவிக்குயில்கள் வரவேற்கத் தைத்திட்ட அமிழ்தொத்த மெல்லிசையும் செவிக்கொடுத்த உயிர்களிடம் களிப்பூற்ற… Continue Reading →
3களிறு கேட்கும் கண்ணலும், உள்ளம் கேட்கும் கனியும்; விழி தேடும் ஒளியும், செவி தேடும் இசையும்; நா விரும்பும் நல்விருந்தும், தளிர் கரம் கேட்கும் நல் உறவும் இசையும், சந்தமும் எழுத்தும்,வடிவும் சிந்தையும், சொல்லும் செயலும், அதன் வடிவும் ஒளியும் , ஒலியும் பரிவும், பிணைப்பும் பல்பம் வடிக்கும் நல்லெழுத்தும், மழலை சிந்தும் வாய்ப்பாட்டும்ம் எம்… Continue Reading →
5முன்னிரவு முழுதும்
அவன் மீதான காதலை மீட்கிறேன்
என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே
முட்டி தெறிக்கும் என் காதலை
வெளிப்படுத்த அன்று என்னிடம்
கைபேசி இருந்திருக்கவில்லை
#மேற்கால மல சூழ்ந்த மேங் காட்டுப் பூமியில மேய்ச்சலுல பொழப் போட்டும் மேலூரான் பொன்னு நானு! #ஒத்தப் பையன் பெத்து ஒசரமா வளர வச்சு உசுரயே உன் மேல உக்காத்தி வச்சிருந்தேன்! #இருக்காதா பின்னே.. இளந்தாரி ஆம்படயான் எருதுமுட்டிச் செத்தப்புறம் உன்ன விட்டு நாதியேது? #மானாவாரி வெள்ளாமை மழ பேஞ்சா மகசூலு.. இல்லாட்டி எரும மாட்டுத்… Continue Reading →
13நுகர்வுக்காக மட்டுமே நகர்ந்து திரியும் உயிரிகளை உயரிய படைப்பான மனிதரென்றால் நான் ஏன் நம்ப வேண்டும் வர்த்தகம் நடக்குமொரு வணிக சந்தை தனை வளமான வையகமென்றால் நான் ஏன் நம்ப வேண்டும் முதலாளியிடம் சென்று முடிவின்றி கூலிவுயர்க்கிறைஞ்சும் முயற்சியை முக்தி தேடும் பக்தியெனில் நான் ஏன் நம்ப வேண்டும் முதலீடு செய்து பதிலீடு எடுக்கப் பாடுபடும்… Continue Reading →
8வேரிட்டு முளைக்கும் பயிர்கள் எல்லாம்., செங்கதிர் விரல்பட்டு., செருக்கடைகிறது.. செந்தமிழே., என்னை தீண்டியது என.. சேலைக் கட்டிய சேதி கேட்டு., சீவகனுக்கும் மீட்ட ஆசை.. மின்அதிரும் மேனியை.. இதழ் சுழித்து விழி அசைக்கயில் வரம் கேட்டு வாதிடுகிறான்., வாசுகி மைந்தன்.. வாளோடும் கோலோடும் போரிட செல்லும் முன்னே., பேதை என்னை போதை கொள்ள வைத்தாயடி.. கனியாகிய… Continue Reading →
5