The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

வாசகர் கவிதைகள்

எழு மகனே – வாசகர் கவிதை

தொண்டையில இறங்குது தோத்துப்போய் திரும்புது- என் மண்டையெல்லாம் வலிக்குது மகனே என்னாச்சி உருண்டு படுத்தாலும் தூங்கமாட்டியே சுருண்டு படுத்தாயே சோகம் தாங்கலா ஆத்தா கண்ணுலா ஈரம் கட்டுது அப்பன் நெஞ்சிக்குள்ள அணுகுண்டு வெடிக்குது எங்கபோச்சி உஞ்சிரிப்பு ஆடிப்போச்சி எந்துடிப்பு சக்கரங்கட்டிய காலுக்கு வேகத்தடை எங்கிருக்கு உண்டது எதுவுமே உனக்கு ஒத்துக்கிலா உன்ன விட்டு உண்ணவே நாங்க… Continue Reading →

4

புதிய பாதை – வாசகர் கவிதை

அணிந்திருந்த காலணிகள் அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் குன்றுகள்… கலக்கம்-நிறைக் காடுகள்… கூரிய கோரைப்புற்புதர்கள்… குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்… அமர்ந்து அவ்வப்போது அவற்றை அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்; இயலவில்லை. எதனாலெனில் இவைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெப்படியோ முடித்து என் இலக்கை அடைந்தபோதோ என் இரத்த உறவினர்களுமே… Continue Reading →

84

அவள் பெயர் – வாசகர் கவிதைகள்

அவள் பெயர் திருவிழா கூட்டத்திலும் கண்டுபிடித்துஎன்னைப்பற்றி நூறு கேள்விகள் கேட்டுஎன் மகளுக்கு நூறு முத்தம் கொடுத்த சுமதி கடைசிவரை என் மகளின் பெயரை கேட்கவேயில்லை… -துரை சந்தோஷ் மனைவி இல்லா முதுமை நதியோடு குளிர்காற்றுநயனம் பேச ,காணும் போது…அவள் நாசியோடு தூயசுவாசம்தவழ்ந்த நினைவு கொண்டேன்!! பனியில் நனைந்த பூங்காவில்பூக்கள் படர்ப்பைக் காணும் போதுஅவள் மேனியில் என்… Continue Reading →

14

இன்னும் அந்த கவிதை – வாசகர் கவிதை

இன்னும் அந்த கவிதை மீதமிருக்கிறது.. முழுவதுமாய் முடித்துக் கொள்ள ரோஜா இதழின் ஸ்பரிசம் தேவைப்படுகிறது.. வெண்ணிலவின் சந்நிதானத்தில்தான் அந்த கவிதை தொடங்கப்பட்டது.. வெண்முத்தின் எழுதுகோல்தான் அத்தனைக்கும் உதவியாய் இருந்தது.. அமிர்தத்தின் எல்லைக்குள் அந்த கவிதை இனிமையின் ராஜனாய் வலம்வருகிறது.. ஆகாச கோட்டையில் அது பெளர்ணமியாய் பதிந்து கிடக்கிறது… காற்றின்சாலையில் அந்த கவிதை தென்றலாய் அரியாசனித்துக் கெளரவமாய்… Continue Reading →

1

நானெனக்கொள்ளடி – வாசகர் கவிதை

காற்றிலுன் சேலை அகப்பட்டதெனில், வீசுவதங்கு என் மூச்செனக்கொள்ளடி நாற்றிலுன் கைத் தீண்டியதெனில், விளைவது அனைத்தும் நானெனக்கொள்ளடி சேற்றிலுன் பாதம் பட்டதெனில், வளைந்தோடும் நதியாவும் நானெனக்கொள்ளடி நேற்றிலுன் உறக்கம் விடுபட்டதெனில், வந்தநினைவுகள் யாவும் எனதெனக்கொள்ளடி மாற்றுண்டு பசிப்பிணிக்கும் மருந்தெனில், உன்நினைவேயன்றி வேறேதடிக் கண்ணே! — மணி

6

கழற்ற முடியவில்லை – வாசகர் கவிதை

கழற்ற முடியவில்லை…அந்த காற்றுப் புக முடியாமுகமூடிகளை…கழற்ற முடியவில்லை… மேலாளர் வசை எதிரேவலுக்கட்டாயப் புன்னகையில்..கூட்டத்தில் மறைந்து சிலரை கடக்கும் வேகத்தில்… விஷேச விருந்துகளில்உதிர்க்கும் உயிரற்ற  சிரிப்பில்…நடிப்பென தெரிந்த நட்பு சொல்லும் கதையில்.. வேண்டாதப்  பேச்சுக்களைவேறு வழியின்றி கேட்கும் செவியில்..எதிர்த்துப் பேச இயலாத நாவில்.. காறி உமிழ்ந்திட தோன்றும்உறவுகள் நடுவில்..அறைந்திடத் துடிக்கும் கைகளின் விரலில்… இறுக்கி அணிந்திருக்கும் முகமூடிகளை… Continue Reading →

3

பெண்ணுடல் – வாசகர் கவிதை

தண்டவாளங்களில் குவியும் சகதியோடு உருண்டோடும் வீட்டு திண்ணைக்கடியில் மடிந்து கிடக்கும் தோட்டத்தின் மணலரித்து புழு அண்டியிருக்கும் வீதியிலே மூட்டைக்கட்டி முடித்தவிழ்க்க மூக்கை கவ்வும் சீராட்டின கைகளையே வாய்பொத்தி மூக்குப்பொத்தி கையாற அணைக்கச்சொல்லும் பள்ளிவாசலையும் பார்த்திருக்காது பகிரங்கத்துடன் பயந்து பயந்து சாவோடு சண்டை போட்டிருக்கும் அள்ளி அணைத்தவனே அங்கங்களை கூறுப்போடுவதை பொறுக்கச்சொல்லி போராடச்செய்யும் காய்கறி வெட்டவும் கூர்முனையை… Continue Reading →

9

ரயில் சிநேகம் – வாசகர் கவிதை

#ரயில்சிநேகம் அன்று! ‘இடம் – பொருள்’ அறிந்த பின் மெலிதாய் புன்னகைத்து மெல்ல ‘ஊர்’ கதை பேசி சொந்தக்கதை (திரித்து) சொல்லி ஊடே ரயிலையும் குறைகூறி திண்டி பரிமாறி முகவரி பகர்ந்து இறங்குமுன்னே கைகுலுக்கி பின்னே…….. நீயாரோ நான் யாரோ!!! #ரயில்சிநேகம் இன்று!!! நீயாரோ நான் யாரோ!!! கைபேசியில் ‘இடம்’பார்த்து கணக்காய் முறுவலித்து கட்’செவியில்’ அளவளாவி… Continue Reading →

111

நித்தமும் அல்ல… நிரந்தரமும் அல்ல … – வாசகர் கவிதை

உச்சி வெயிலில் பச்சியின் நிழலும் நிரந்தரம் அல்ல……. பணத்தின் மதிப்பிழந்த பிணத்தின் ஊனும் நிரந்தரம் அல்ல……. நாளைய பிணம் என்றபோதும், இன்றைய மனம் ஒருபோதும், நிரந்தரம் அல்ல….. முன் போற்றுதலும், பின் தூற்றுதலும், நிரந்தரம் அல்ல……. தேக்கி வைத்த காமமழையும், பாக்கி வைக்காத முத்தத்துளியும், நிரந்தரம் அல்ல……. நேசிக்கும் முன் யோசிப்பதும், யோசித்த பின் நேசிப்பதும்,… Continue Reading →

8

ஊரடங்கு – வாசகர் கவிதை

இரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்கும் இந்த ஊரடங்கில் ஒருநாள் மழையும் பெய்து அடங்கியது. விடுமுறை சிறுமி முதல்முறை பறக்கவிட்ட பட்டத்தை பார்த்து கோழிகளும் கொக்கரித்து கொண்டாடின கோவில்களே பூட்டப்பட்டு புன்னியங்களை சேர்த்தாலும், முகம்மூடா மூடர்கள் சிலர் சுற்றித்திரிந்து பாவங்கள் செய்தனர். அப்பாவிகள் கால்கடக்க காத்திருந்தது கடற்கரை. சிறுவர் பூங்காவின் புற்கள் சிறுவனின் வெட்டபடாத தலைமுடியைப்போல… Continue Reading →

215

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்