இன்னும் அந்த கவிதை
மீதமிருக்கிறது..
முழுவதுமாய் முடித்துக் கொள்ள
ரோஜா இதழின் ஸ்பரிசம்
தேவைப்படுகிறது..

வெண்ணிலவின் சந்நிதானத்தில்தான்
அந்த கவிதை தொடங்கப்பட்டது..
வெண்முத்தின் எழுதுகோல்தான்
அத்தனைக்கும் உதவியாய்
இருந்தது..

அமிர்தத்தின் எல்லைக்குள்
அந்த கவிதை இனிமையின்
ராஜனாய் வலம்வருகிறது..
ஆகாச கோட்டையில்
அது பெளர்ணமியாய்
பதிந்து கிடக்கிறது…

காற்றின்சாலையில் அந்த கவிதை
தென்றலாய் அரியாசனித்துக்
கெளரவமாய் ஓங்கிக் கிடக்கிறது..
மானுடங்களின் இதயத்தில்
காதலாய் காட்சி தருகிறது
அந்த கவிதை..

இருள்களின் கோரம் அந்த
கவிதையை தன்னகித்திட
தவமிருக்கிறது..
பாதாள அரக்கனும் அந்த
கவிதையை காவ காத்திருக்கிறான்.

பாரின் பாவங்கள் அந்த
கவிதையை பந்தாட
நினைக்கிறது.
பரீட்சயமில்லா பாவிகள்
பதறடிக்க நினைக்கிறார்கள்
அந்த கவிதையை..

இத்தனைக்கும் அந்த கவிதை
பத்திரமாய் இருக்கிறது..
என் இதய பொக்கிஷமாய்
இதயவறையில் இதமாய் இருக்கிறது.
இன்னும் அது….

என் கவிதை💚

— சுமைல் ஹரீஸ்

இலங்கை

1