இரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்கும்
இந்த ஊரடங்கில்
ஒருநாள் மழையும்
பெய்து அடங்கியது.

விடுமுறை சிறுமி
முதல்முறை பறக்கவிட்ட
பட்டத்தை பார்த்து
கோழிகளும் கொக்கரித்து கொண்டாடின

கோவில்களே பூட்டப்பட்டு புன்னியங்களை சேர்த்தாலும்,
முகம்மூடா மூடர்கள் சிலர்
சுற்றித்திரிந்து பாவங்கள் செய்தனர்.

அப்பாவிகள்
கால்கடக்க காத்திருந்தது கடற்கரை.

சிறுவர் பூங்காவின் புற்கள்
சிறுவனின் வெட்டபடாத தலைமுடியைப்போல
வளர்ந்து காட்சியளித்தன.

மூடப்பட்ட திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகளின் ஆடலும் பாடலும்.

இன்னும் சில நாட்கள்
சிறுவனாக நானும்
அலைப்பேசியில்
என் கதையும்.

 

 

பாதசுவடுகள்

தேங்கிய மழைநீரில்
விளையாடிய குழந்தையின்
வீடு முழுவதும்
மீன்குஞ்சுகளின் பாதசுவடுகள்.

 

— நிதிஷ்

புதுச்சேரி

 

0