#ரயில்சிநேகம் அன்று!

‘இடம் – பொருள்’ அறிந்த பின்
மெலிதாய் புன்னகைத்து
மெல்ல ‘ஊர்’ கதை பேசி
சொந்தக்கதை (திரித்து) சொல்லி
ஊடே ரயிலையும் குறைகூறி
திண்டி பரிமாறி
முகவரி பகர்ந்து
இறங்குமுன்னே கைகுலுக்கி
பின்னே……..

நீயாரோ நான் யாரோ!!!

#ரயில்சிநேகம் இன்று!!!

நீயாரோ நான் யாரோ!!!

கைபேசியில் ‘இடம்’பார்த்து
கணக்காய் முறுவலித்து
கட்’செவியில்’ அளவளாவி
முகநூலில் மட்டும் முகம்பார்த்து
ஆப்பில் திண்டி சொல்லி
எந்தப்பக்கமும் பாராமல் சாப்பிட்டு
யாரேனும் பேச எத்தனித்தால்
லேசாக கண்ணயர்ந்து
இசையில் லயிப்பதாய் பாசாங்குசெய்து

இறங்குமிடம் வந்ததும்
பாராத சிநேகம் இரண்டு சேர்ந்திருக்கும்…
சுட்டுரையில்!!!

— மாலதி N P

சென்னை

0