அற்பமே பேரழகாய் நீதிரிந்து மெய்மயக்கி வாழ்வழிப்பாய்
சொற்பமே உன்நோக்கங் கண்டறிவார் இந்தப் புவிமேலே
எற்பமே நீயிருக்க உன்னொளி வாங்கி யுயிர்பிழைக்கும்
சொற்கடல் மாமதி யென்றுரை யும்மை விரும்பேனே!
இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து இதம்தரும் வீணை இசையது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை புத்துயிர் இயற்கையின் வற்றாத… Continue Reading →
1