The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 9 of 14

நாட்கள்

உனை கடந்து போன நாட்களெல்லாம் கரைந்து போகும் உன் விழித் தொட்ட நிமிடம் – மட்டும் என்னுள் உறைந்து போகும்!!!

3

நின் விழி

இருளென்றும் ஒளியென்றும் யான் அறியேன் – இவை இரண்டும் நின் விழிதானோ ?!!

1

ஒளியூடும் இரவிது

ஒளியூடும் இரவினிலே மென்கீற்று காற்றதுவும் தருகின்ற மணமதில் இரு காலும் ஓய்வுற்று ஒரு மனமோ அமைதியாகி கண் கொண்டு பார்ப்பெதெல்லாம் கவி பரவி தோன்றுவதாய் இன்புற்று இசைந்திருக்க விளைவது அன்பொருளாய் என்றும் அமைந்திடுமே!!!

1

விழி கடந்தாய்

இமை மூட இருள் சூழ என்னுள் நிறைந்தாய் உதடசையா மொழியால் உள்ளம் நனைத்தாய் அதனூடே நீந்தினாய் இலை நழுவும் துளியாய் பனி தொடரும் பொழுதாய் என் விழி கடந்தாய்!

2

ஓர் கவிதை

இனிய தமிழின் பறைச்சாற்றும் பெருமை – கவிதை உள்ளத்தின் உணர்வுகளை வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனைகளை வீணையையாய் மீட்டுவது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை உறைய வைத்து உயிரை இரசிக்க செய்வது கவிதை மண் வாசந்தனை செவிக்கும் உணர்த்துவது கவிதை பிரம்மிக்கும் இயற்கையின் வற்றாத ஊற்று  கவிதை சொக்கும் விழியின்… Continue Reading →

0

கடந்து போக கண்டேண்

கடந்து போக கண்டேண் மெல்ல நடந்து போகும் பெண்ணவளின் பாதம்தனை கண்டேன்   விழி நிறைந்த பாதங்களை நிழல் தொடரக் கண்டேன் கருமை நிழலதிலே காலம் கரைந்திடவும் கண்டேன் எண் திசையில் அவள் திசையே என் திசையென உணர்ந்தேன் அத்திசையை நாடுகையில் அவள் குழல் வேக மறையக் கண்டேன் குழல் தந்த மணத்திலே திசை நீண்டு வளர நீண்ட… Continue Reading →

4

எவனோ ?

தென்றலின் இளையவளை தேடிவரும் வேந்தன் எவனோ! சிலிர்க்கின்ற மேனியவளின் சிந்தை கொள்பவன் எவனோ! நலின இடையவளின் கரம் கோர்ப்பவன் எவனோ! மின்னல் பார்வையவளின் கார்மேக கண்ணன் எவனோ! திறம் கொண்ட விரல்களால் இவ்வீணையை வாசிக்க வருபவன் எவனோ! நங்கையவள் மேனி மேற்படரும் மெல்லிய ஆடை எவனோ! மயக்கும் இவள் விழிகளை கவரும் கந்தர்வன் எவனோ! நிலம்… Continue Reading →

1
1 7 8 9 10 11 14

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்