The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Author

Murugan D

என்ன எழுத ?

​மீண்டும் மீண்டும் உனை பற்றியே எழுத சொல்கிறாயே – நான்  என் எழுதுவேன் ? ஓயாமல் எனை சுற்றும் உன் நினைவை அகல சொல்லி எழுதவா ? கவிஞன் என்று கூறாமல் எனை  காதல் பித்தன் என்று சொல்வதை  உன்னிடம் முறையிட்டு எழுதவா ? இயற்கையை தான் எழுத தொடங்கினேன்  மெல்ல அசைந்தாடும் அந்த பூவிதழ்களில்… Continue Reading →

3

கண்களுக்கு முத்தம்

கருவில் உரு கொண்டு வெளி கொணர்ந்த – அந்நாளில் இவள் தான் உன் பிரம்மம் என காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம் சிறு பிஞ்சு விரல் கன்னங்களை கிள்ளி விட்டு – என் போட்டியாய் வந்தவனே என கோப அன்பையுணர்த்திய – என் பிரம்மத்தின் கருவறையை என்னுடன் பகிர்ந்தோரை காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம் அடியெடுத்து வெளிவந்து புதிய… Continue Reading →

0

படைத்தான் இவன்

அழகு சொல் பெயர்த்தெடுத்து அங்கம் செய்தான் கவிதரு இன்னோசை அதனுட் புகுத்தினான் மோகன யுகஞ்செய் தானுடனனுப்பினான் மென்னுடற் மண்பட்டு விளைந்த நயத்துடன் இலக்கணம் படைத்தான் ஆதிப்பெற்று அந்தமற்ற புகழ் கொடுத்தான் ஓசை தந்த உவமை கொண்டு உருவஞ் செய்தான் தெற்கு கண்ட மேவதிலே குடிபெயர்ந்தான் கடற்சேர் புண்ணாற்றுடன் நாகரீக தனை கொடுத்தான் இன்னாகி இன்புறும் காவியம்… Continue Reading →

94

நிம்மதி

ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து… Continue Reading →

16

மாதத்தின் ஓர் நாள்

விழி மூடி உறங்குவதாய் நான் பாசாங்கு செய்திருந்தேன் – அட தரையில் கிடக்கிறாயே என் செல்லமே என்று எனை மெத்தையில் கிடத்தினாள். நடிப்பில் அன்று நான் கெட்டிகாரனாக இல்லாததால் இமை திறந்து பார்த்துவிட்டேன் கீச்சென்று கத்தியும் விட்டேன் – என்னிடமே நடிக்கிறாயா என்று என் கன்னத்தை கிள்ளி விட்டாள் – நான் எழுந்து ஓட துரத்தியும்… Continue Reading →

9

உருகிடும் உள்ளம்

அவள் முகம் கண்டே என் கண்கள் உயிர்பெறும் இதமாய் இமை அசைத்தே அவள் சுவாசிக்க மயிலறகாகும் கரு விழியோ நெடுந்தூரம் பிரவேசிக்கும் இரு இமைகளுக்கு இடையே அவள் இருப்பதை அறிய!   அவள் பிம்பம் கண்ட அச்சிறு நொடிகளுக்கு – இவை இமைகளை வெறுத்து ஒதுக்கும்! இதயத்தின் துடிப்பில் ஒரு ஆனந்தம்! இதழை விட்டு வெளிவர… Continue Reading →

27

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் இன்று

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடலை தந்தவர். தமிழின்பால் ஆர்வமிக்கவர், அந்த செந்தமிழை நேசித்த பாரதியாரை ஆத்ம குருவாக எண்ணி தன் இயற்பெயரான “கனக சுப்புரத்தினம்” என்பதை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். அவரின் சுவைமிக்கப் படைப்புகளில் சில: கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்… Continue Reading →

1

நாட்கள்

உனை கடந்து போன நாட்களெல்லாம் கரைந்து போகும் உன் விழித் தொட்ட நிமிடம் – மட்டும் என்னுள் உறைந்து போகும்!!!

3

நின் விழி

இருளென்றும் ஒளியென்றும் யான் அறியேன் – இவை இரண்டும் நின் விழிதானோ ?!!

1

ஒளியூடும் இரவிது

ஒளியூடும் இரவினிலே மென்கீற்று காற்றதுவும் தருகின்ற மணமதில் இரு காலும் ஓய்வுற்று ஒரு மனமோ அமைதியாகி கண் கொண்டு பார்ப்பெதெல்லாம் கவி பரவி தோன்றுவதாய் இன்புற்று இசைந்திருக்க விளைவது அன்பொருளாய் என்றும் அமைந்திடுமே!!!

1

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்