விழி மூடி உறங்குவதாய் நான்
பாசாங்கு செய்திருந்தேன் – அட
தரையில் கிடக்கிறாயே என் செல்லமே
என்று எனை மெத்தையில் கிடத்தினாள்.

நடிப்பில் அன்று நான் கெட்டிகாரனாக
இல்லாததால் இமை திறந்து பார்த்துவிட்டேன்
கீச்சென்று கத்தியும் விட்டேன் – என்னிடமே
நடிக்கிறாயா என்று என் கன்னத்தை
கிள்ளி விட்டாள் – நான் எழுந்து ஓட
துரத்தியும் வந்தாள்.

வாசற்கால் தடு பட்டு சற்றே நான்
விழுந்துவிட்டேன் – வலியதை நான்
உணரவில்லை அவள் கண்களில் கண்டேன்.

மடியினில் கிடத்தி என் தலையை
கோதி விட்டாள் – ஒன்றுமில்லையடா
சரியாகிவிடும் என்றே என்
கண்களை அவள் உதட்டால்
ஒற்றி எடுத்தாள்.

பருவமிடுக்கில் இன்று நான்
மீசை முறு க்கி நடந்தாலும்
வாசல் வந்து வழியனுப்பும் அவள்
இன்முகம் காணவே மாதம்
ஒருமுறை காத்திருக்கிறேன் .

7