அத்தனை வேகமாகவா கடந்து விடும் அந்த நொடி யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை என்றதும் மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை விலக்கி விட்டு உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை அடைந்து விட்டு எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள் பதிந்து விட சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள் ஏற்படுத்திய மாயம் நொடியினும் குறைந்த… Continue Reading →
132அவள்
வார்த்தைகளின்
ஒலி வடிவத்தை
வற்ற செய்தவள்
பட படப்பாய் என்றும் என்
படர்ந்த மார்பினில் ஓர்
இறுக்கத்தை தருபவள்
சிந்திக்க சிந்திக்க
இதழினில் ஈரப்பதம் குறைந்திட
இரவெல்லாம் விழிக்க செய்பவள்
யாங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காதல், அவளை அவளாய் ஏற்று கொள்வதில் மேலும் பல்கி பெருகுகிறது. ஆம் நீ நீயாய் வேண்டும், மாற்றங்கள் மாறாததாயினும் முயன்று தான் பார்ப்போமே…
50யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →
95வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம் அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில் உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன் இலக்கணம் அறிகுவாயோ ? ஏதோ… Continue Reading →
1