The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Author

Murugan D

அவனியது மறக்குமே

தளிர்க்கொடியில் எழில்நிறத்தில் நறுவலர்கள் முகிழ்ந்திடவே! மண்பொன்னில் வேரூன்றிய மாதருவின் கிளைகளிலே பசப்பூரும் இலைவிசிறி அதுவளிக்கும் குளிர்வளியும் , தேனரும்பை தீண்டிடவே வண்டுயர்த்திடும் வல்லிசையும் , பிணைந்தநல் தென்றலிலே தேக்கிவைத்த மதுரங்களும் ……!!! வெள்ளிக்கூழ் நீர்சொரியும் முகில்த்தீண்டும் அருவிகளின் முதுகதனில் உதித்தெழும் இளஞ்சிவப்பு இரவியதை இருள்நிறத்து கவிக்குயில்கள் வரவேற்கத் தைத்திட்ட அமிழ்தொத்த மெல்லிசையும் செவிக்கொடுத்த உயிர்களிடம் களிப்பூற்ற… Continue Reading →

23

யாதுமாகி நின்றாய் – வாசகர் கவிதை

களிறு கேட்கும்‌ கண்ணலும்‌, உள்ளம்‌ கேட்கும்‌ கனியும்‌; விழி தேடும்‌ ஒளியும்‌, செவி தேடும்‌ இசையும்‌; நா விரும்பும்‌ நல்விருந்தும்‌, தளிர்‌ கரம்‌ கேட்கும்‌ நல்‌ உறவும்‌ இசையும்‌, சந்தமும்‌ எழுத்தும்‌,வடிவும்‌ சிந்தையும்‌, சொல்லும்‌ செயலும்‌, அதன்‌ வடிவும்‌ ஒளியும்‌ , ஒலியும்‌ பரிவும்‌, பிணைப்பும்‌ பல்பம்‌ வடிக்கும்‌ நல்லெழுத்தும்‌, மழலை சிந்தும்‌ வாய்ப்பாட்டும்ம்‌ எம்‌… Continue Reading →

7

மீள்வாசிப்பு செய்யுங்கள்

மௌனங்களின் நிழல்களிலே கசிந்துருகும் ஓர் பிம்பம் நேற்றைய நாட்களின் தேடல்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பக்கங்களை புரட்டுவதைப் போல் வருடங்களை நகர்த்திச் சென்று அறிந்தவர்களை ஆராய்ந்திட புன்னகையும் ஓர் சிறு துளி கண்ணீரும் உளவாடி கொண்டிருக்கும் கோர்வையாய் இல்லாமல் காலக்கோட்டில் சிதிலடமைந்து காட்சிகள் யாவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் நிலை நின்று ஓர் நிமிடம் நிசப்தத்தில் விழி… Continue Reading →

439

மடமைகள்‌ மாறுவதில்லை – வாசகர் கவிதைகள்

முன்னிரவு முழுதும்
அவன் மீதான காதலை மீட்கிறேன்
என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே
முட்டி தெறிக்கும் என் காதலை
வெளிப்படுத்த  அன்று என்னிடம்
கைபேசி இருந்திருக்கவில்லை

10

கும்புடுறேஞ்சாமி – வாசகர் கவிதை

#மேற்கால மல சூழ்ந்த மேங் காட்டுப் பூமியில மேய்ச்சலுல பொழப் போட்டும் மேலூரான் பொன்னு நானு! #ஒத்தப் பையன் பெத்து ஒசரமா வளர வச்சு உசுரயே உன் மேல உக்காத்தி வச்சிருந்தேன்! #இருக்காதா பின்னே.. இளந்தாரி ஆம்படயான் எருதுமுட்டிச் செத்தப்புறம் உன்ன விட்டு நாதியேது? #மானாவாரி வெள்ளாமை மழ பேஞ்சா மகசூலு.. இல்லாட்டி எரும மாட்டுத்… Continue Reading →

13

நான் ஏன் நம்ப வேண்டும் – வாசகர் கவிதை

நுகர்வுக்காக மட்டுமே நகர்ந்து திரியும் உயிரிகளை உயரிய படைப்பான மனிதரென்றால் நான் ஏன் நம்ப வேண்டும் வர்த்தகம் நடக்குமொரு வணிக சந்தை தனை வளமான வையகமென்றால் நான் ஏன் நம்ப வேண்டும் முதலாளியிடம் சென்று முடிவின்றி கூலிவுயர்க்கிறைஞ்சும் முயற்சியை முக்தி தேடும் பக்தியெனில் நான் ஏன் நம்ப வேண்டும் முதலீடு செய்து பதிலீடு எடுக்கப் பாடுபடும்… Continue Reading →

8

எத்தனிக்கும் என் நெஞ்சு – வாசகர் கவிதை

வேரிட்டு முளைக்கும் பயிர்கள் எல்லாம்., செங்கதிர் விரல்பட்டு., செருக்கடைகிறது.. செந்தமிழே., என்னை தீண்டியது என.. சேலைக் கட்டிய சேதி கேட்டு., சீவகனுக்கும் மீட்ட ஆசை.. மின்அதிரும் மேனியை.. இதழ் சுழித்து விழி அசைக்கயில் வரம் கேட்டு வாதிடுகிறான்., வாசுகி மைந்தன்.. வாளோடும் கோலோடும் போரிட செல்லும் முன்னே., பேதை என்னை போதை கொள்ள வைத்தாயடி.. கனியாகிய… Continue Reading →

6

வெப்பம் – வாசகர் கவிதை

ஒரு ரொட்டி பாக்கெட் எடுத்ததற்கு சூடு பெற்றபோது அவன் சிறிதும் கத்தவில்லை அம்மாவை அழைக்கவில்லை இனி செய்யமாட்டேனென கெஞ்சவில்லை.. வலியின் அறிகுறி அவன் முகத்தில் தெரியவில்லை.. கொஞ்சதூரம் சென்றபின் சூடு வைக்கப்பட்ட இடத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டான் பசித்த வயிற்றின் வெப்பத்தைப் போல அது அவ்வளவாக சுடவில்லை. – ந.சிவநேசன் சேலம்

11

பிரசவதேதி குறிக்கட்டுமா மகனே? – வாசகர் கவிதை

எறும்புகளுக்கு சர்க்கரை டப்பாவை திறந்து வழிகாட்டும் செல்லம்மையக்கா பறவைகளின் கானம் கேட்கவே தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்தாள் அண்ணாச்சி கடையில் வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து தன் பெயரை செல்ல அம்மை என பிரித்து உச்சரிக்கச் சொல்லுவாள் தெருவில் விளையாட வரும் பொடுசுகளை அள்ளி அணைத்து வாசம் பிடிப்பாள் புழுதிக்கும் குழந்தை வாசமென்பாள் அடைபடும்… Continue Reading →

12

தூண்டில் இரை – வாசகர் கவிதை

எந்த மீனின்ஆயுளின் முடிவு காலம்இன்றோ என்றுதலைகீழ் கேள்விக்குறியாய்தூண்டில் முள் தக்கைகளாய்மேல் நின்று கவனிக்கிறார்கள்தகுந்த நேரத்தில்காட்டிக்கொடுப்பதற்கு எத்தனை முறை வேண்டாமென்றுதலை அசைக்கிறது தக்கைமீன்களின் வன்புணர்வுகொக்கிகள் மாட்டப்பட்டுகழுவேற்றம் தண்டனையாய் ஒற்றை உணவுக்காய்இருகொலைகள்இரைக்காய் புழுஇரையாய் மீன்நியாயமற்ற வேட்டை இது – மணிவண்ணண் மாசிலாமணிகடலூர்

17

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்