தளிர்க்கொடியில் எழில்நிறத்தில்
நறுவலர்கள் முகிழ்ந்திடவே!

மண்பொன்னில் வேரூன்றிய
மாதருவின் கிளைகளிலே
பசப்பூரும் இலைவிசிறி
அதுவளிக்கும் குளிர்வளியும் ,

தேனரும்பை தீண்டிடவே
வண்டுயர்த்திடும் வல்லிசையும் ,

பிணைந்தநல் தென்றலிலே
தேக்கிவைத்த மதுரங்களும் ……!!!

வெள்ளிக்கூழ் நீர்சொரியும்
முகில்த்தீண்டும் அருவிகளின்
முதுகதனில் உதித்தெழும்
இளஞ்சிவப்பு இரவியதை
இருள்நிறத்து கவிக்குயில்கள்
வரவேற்கத் தைத்திட்ட
அமிழ்தொத்த மெல்லிசையும்

செவிக்கொடுத்த உயிர்களிடம்
களிப்பூற்ற மோதிடுமே !!

அவ்வணியைப் பருகிடவே
அவனியது மறந்திடுமே…!

– சந்தோஷ்
செங்கல்பட்டு

5