எண்ணங்களை மட்டும் கொண்டு எழுத்துக்களை வடிக்கிறேன் அதன் வடிவங்கள் எப்போதும் அமைதியாய் அன்பாய் எனை நோக்கும் காலத்தின் மாயைகளில் கொண்ட களி வடிவம் பெரிதும் மாறாமல் ஏனோ நோக்கங்கள் மாறுவதினால் அதன் தாக்கங்கள் கூடுகிறது மார்பில் கனத்திருக்கும் மணித்துளிகளை சேகரித்து வரிகளில் திணிக்கும் போதுதான் எழுத்துக்கள் சங்கமமாகிறது அச்சங்கமத்திலே நான் வாழ்கிறேன் உறைந்து காய்ந்த கரு… Continue Reading →
160என் தோள் சாய்ந்து நீ அமர்ந்திருப்பதாய்
சப்தங்கள் எல்லாம் அமைதியாய்
நின் மூச்சாய் மாறி இசைப்பதாய்
வான் பறக்கும் ஓர் சோடி பறவை
சன்னல் வழி நம்மை காண்பதாய்
இலை விழு துளியொன்று கனத்து நுனி வந்து நுனி யதன் அரவணைப்பில் சற்றே மேனிப் பருத்து – கீழ் நோக்கி மெல்லியவளின் கன்னம் விழ மெல்லியவள் நளினம் கொண்டு துளியதை துடைத் தெறிய துடைத்தெறிந்த துளியது பெண்மையவள் கூந்தலுரசி சிதற பரவியது ஈரப்பதம் நதியதன் கரையோரம் கொண்டதொரு ஓசை போல் சிலிர்த்தது கானங்கள் துளியது கூட்டத்துடன்… Continue Reading →
35சிட்டுக்குருவிச் சிறகுகளின் சிலுசிலுப்பில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஆவியாகிவிட்டது ஆணுறுப்பு எரிமலையின் தீப்பிழம்பில் தேகத்தின் பசிக்கு தேகமே இரையாகும் அந்த இயற்கை விதியில் நிகழும் பிழை மீண்டும் நிகழ்ந்திருக்கிறது ‘மோகப் பார்வையுடையோர் கண்டால் தேகம் சிதைத்து விடு பாப்பா’ என்பது போல் கவிதை நூறு கிடைக்கும் என்பதில் மொழிக்கு மோகம் மினுக்கான வார்த்தையோடுன் தனக்கான பொலிவோடும்… Continue Reading →
0மெலிவு விரிவு பாதை கொண்ட வாழ்க்கை இது… நாடி நடக்கும் நடையில் தங்கும். நாளை தொடரும் நாட்டங்கள். தேடிப் போகும் பாதை நெடுகிலும், தேய்ந்து போன ஏக்கங்கள்! மேட்டிலெல்லாம் உருளும் கற்கள், பள்ளமெல்லாம் பருத்த கள்ளி! பாய்ந்து செல்லும் ஆசைக் குதிரை… ஆய்ந்து கொல்லும் ஆழ்ந்துள்ளப் பய வியர்வை! ஏங்கி நிற்கிறது! எதிர்பார்ப்பு… அங்கு நெடும்பாதை… Continue Reading →
0ஒரு அழகிய நதிக்கரையோரம் வானை பார்த்தவாறு செங்குத்தாக வளர்ந்து நின்றது பச்சை நாணல்கோரைப்புற்கள் நதிக்கரையில் ஓடுவது நதி எனும் நீர் மட்டும் இல்லை விதி எனும் காலமும் தான் வளர்ந்தப்பின் பிடிங்கி எடுக்கப்பட்டு தீரா குடைச்சலில் மீளா கோரைப்புல்கள் நீங்கா வலியுடன் பச்சை நிறத்திலிருந்து காய்ந்து பழுப்பு நிறமாகி வெள்ளை நூல்களால் கோர்க்கப்பட்டு மஞ்சள் சிவப்பு… Continue Reading →
0புழுதி விழும் சாலையிலே புன்னகை தெளிக்கும் பெண்ணொருத்தி புதிதாய் தான் தெரிகின்றாள் – தினம் புதிதாய் பிறக்கும் ஒவ்வோர் நாளும் தெளிவான அவள் பேச்சுக்களில் தெளிந் சிந்தனை அது ஓங்கியிருக்கும் தொன்மையதன் சிறப்பும் அறிவும் – செய்யும் தொழிலதற் தன்மைதனையும் சிறப்பாய் அறிந்திருக்கிறாள் இதல்லவா பெண்ணியம் இதல்லவா பெண்ணியத்தின் கூறு என்றவள் ஏனோ அதிகம் கூறுவதில்லை… Continue Reading →
9எது காதல் எது நட்பு எது பாசம் என்று தேடி ஏது காதல் ஏது நட்பு ஏது பாசம் என்று யாவற்றையும் தொலைத்து இது காதல் இது நட்பு இது பாசம் என்றுணர்கையில் வாழ்க்கையின் எல்லையில் இருப்போம் இதுதான் அன்பை வெளிப்படுத்தும் வழி இது தான் அன்பு என்று நாம் பல முடிச்சுகளை போட்டு கொண்டே… Continue Reading →
20தமிழ் மூச்சாய் என்னுள்ளே நுழைந்து பேச்சாய் என் நாவில் தவழ்ந்து தேனாய் என் செவியில் பாய்ந்து நிலவாய் என் கண் முன்னே தேய்ந்து கயிறாய் என் உடலில் பிணைந்து உயிராய் என்னுள்ளே வாழ்கிறாய். நீயே என் தாயாக நீயே என் தந்தையாக நீயே என் தமயனாக நீயே என் தமக்கையாக நீயே என் தோழானாக நீயே… Continue Reading →
5தினந்தினம் விழிக்கிறாள் பல கனவுகளோடு அவள் பயணம் தான் தொடருதே ஆயிரம் தடைகளோடு பெண்ணாக பிறந்ததே பாவம் என்ற எண்ணம் தான் தினம் அவள் நெஞ்சோடு பேருந்தில் பயணம் கூட போர்களமாக பல வார்த்தைகளின் வன்முறைகளை தினம் கடந்திவள் போக பணியிடம் தான் சென்றாலும் பாலியல் தொல்லை சக நண்பனாக நினைத்தவனிடம் காதல் தொல்லை காதலெனும்… Continue Reading →
7