பாராதி நீ வா இனி நாட்டிற்கே பெரும் நோய்ப்பிணிஅரசியல் எனும் பெருஞ்சனிஅதை அழிப்பதே உன் முதற்பணிநிலமை கண்டு வருந்தாதே நீயே அதற்கு மருந்தவாய்சிலபேர் உண்டு உதவிடவேபலபேர் உண்டு பகைத்திடவேஇளையோர் உண்டு இளைக்காதேமலையைக் கூட தகர்த்திடுவோம். – சண்முக சுந்தரம் புதுக்கோட்டை திசையான கவிகள் ஆயிரம் கவி பிறக்கட்டுமே மண்ணில் ஆயிரம் ஏடுகள் குவியட்டுமேகம்பனைப் போல் காவிய ரசமும் … Continue Reading →
4இது விதியின் விளையாட்டு
விழிகள் ஏற்க இயலா பெரு – வெளிச்சத்தின்
இருள் தெளிக்கும் விளையாட்டு
இருண்டிடாத பகலில் கண்ட கனவுகளை
இருள் போர்த்தி மறைக்கும் – விதி
யவன் விளையாட்டு
இறுகி பிணைந்து கோர்த்த கைகளை
சட்டென விலக்கி விட்டு – சிரிக்கிறான்
தரையினில் துவள்வதை கண்ணார இரசிக்கிறான்
காலையில் எழுந்ததும் மழை சத்தம்
பிசிறு பிசிறாய் சன்னலின் வழியே
துளிகளாய் இலைகளிடை தங்கி
மண்ணின் மடியினிலே வீழ்ந்து சிதறி
புதிதாய் இனம் புரியா மோகத்தினை
தெளித்திடும் இக்காலை வேலையில்
பூக்கள் இல்லா மரமும்
மழைத்துளிகளை தாங்கி கொண்டு
தாய்மையின் பூரிப்புடன் நெகிழ்ந்திட
பால குமரனை எழுத்து சித்தர் என்பதில் எவ்வளவு பொருத்தம். தஞ்சை கோவிலை கட்டிய விதத்தையும் அதன் நுட்பங்களையும் இவ்வளவு அழகாக ஒரு புதினத்தில் கொண்டுவர எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். ஆராய்ச்சி நூலையும், கைவிட்டு கீழ் இறங்க மறுக்கும் சுவையான நாவலையும் ஒருங்கே அமைத்திருக்கிறார்.
65மதியென்னும் பொருளியந்து
காலத்தின் இருப்பை உணராது
தன் என்னும் பாரத்தை வெளி யெங்கும்
இறக்கி விட்டு அவள் ஆடுகின்றாள்
பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.
108என் உயிர் நாடிடும் சிவ தாண்டவம் பூவை நோக்கும் கண்களிலே அனல் கோபம் வீசிடும் தாண்டவம் சிவனே மாயனே என் சிந்தையில் சிறந்தவனே இராக தாளங்களினூடே எந்தன் இரணங்களை ஆற்றுகின்றேன் இறையே நின் பெயரை ஓதுகின்றேன் ஒற்றை மனதினிலே பாயும் ஓராயிரம் அம்புகளையும் உடைத்தெறிந்து ஆடுகின்றேன் உமையனே நீ என்றோர் துணையுடன் இதழ்கள் புரியும் இளநகை… Continue Reading →
140யாங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காதல், அவளை அவளாய் ஏற்று கொள்வதில் மேலும் பல்கி பெருகுகிறது. ஆம் நீ நீயாய் வேண்டும், மாற்றங்கள் மாறாததாயினும் முயன்று தான் பார்ப்போமே…
138தேவாரம், தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் ஒரு புதிய முயற்சி. தேவாரத்தின் சுவை மாறாமல் அதனுடன் சிறிய அளவில் எனது தனித் தன்மையை புகுத்தியுள்ளேன். தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்
75கருமை விரும்பா கனவான் களினால் பொன்னிற மேனிக்கு பொன்னிலே முலாஅம் பூசுவது போன்று புகழ்ந்த நிமித்தம் ஆரிய மரபுக்கு அடிமை ஆனது! கனவானும் நெஞ்சம் கனக்கும் படியே பதிலைச் சொன்னேன் ‘புதுக்க விதையாய்’ மனத்துள் விதைத்த ‘மா’நிற விதையாய்! தங்க நிறமுதற் தேங்காய் நிறம்வரை சுவைத்து சலித்த அனைத்தும் என்னாட்டில் சுவையே பார்க்கா உழைத்து களைத்த… Continue Reading →
2