திருவோட்டினிலே பிச்சைக் கொண்டு உண்டு
நறு சாம்பல் பூசி இடு காட்டினிலே
சிறு தென்றல் தொட்டு இலை விழு மரத்தினடியினிலே
பெரு முலை கொண்ட நாயகியின்
குறு மடியினில் தவழும் – என் சிவன் தங்கும்
திருவிடை மருதூர் இது தானோ

குளிர்நீர் குளத்து தளிர் இதழ் விரித்த
தாமரையை உச்சி முடியினில் சூடி
குடம் குடமாய் அபிஷேகந் தனில் நனைந்து
படம் எடுக்கும் பாம்பினை பவ்வியமாய்
இடைக் கட்டி நகை புரியும் – என் பரமன் உறையும்
திருவிடை மருதூர் இது தானோ

வரங்களை அள்ளி கரையினில் வீசி வரும்
வளமான காவிரி கரையினிலே
உயர் வேதங்களின் முதல்வன் – என் எந்தை ஆளும்
திருவிடை மருதூர் இது தானோ

உயர்ந்து தடித்த புற்றினிலே நிலைத்திருக்கும்
அழகிய நாகந்தனை வளைத்து மாலையாக்கி
அதனோடு பல்வகை எலும்புகளை ஆபரணமாக்கி
அன்பால் நிறைந்தவள் உடன் எருதினில் அமர்ந்திருக்கும் – என் இறைவன் இன்புற்றிருக்கும்
திருவிடை மருதூர் இது தானோ

மலர் சூடிய மங்கையர் நறுமண புகை வீச
அடியவர்கள் நித்தம் நின் குளிர் பாதம் தொழ
மாபெரும் அரக்கர் தம் ஆற்றலொழித்த
மலையொத்த வில் ஏந்திய – என் மாயவன் துயிலும்
திருவிடை மருதூர் இது தானோ

எந்தாய் என்னுள் நிறைந்தாய்
இந்த பண்ணில் உறைந்தாய்
உடன் செவிதனில் நுழைந்தாய்
எல்லாம் சிவமயமாய்
சிவனே நின் பாதம் போற்றி
போற்றி போற்றி

7