The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

வாசகர் கவிதைகள்

தொற்று வழி கற்றது

தான் தூங்கிய பின் வீட்டுக்கு வரும் தந்தையிடம் இன்று, அவர் கால்களுக்கு இடையே… கைலியின் மேலே ஆடிக்கொண்டு இருக்கிறான்… ஆறுவயது சிறுவன்!! அப்பொழுது… அவன் நாசியை நனைத்தது காற்றுத்துளிகள் மட்டுமல்ல தந்தையின் வியர்வைத் துளிகளுமே!! கொரோனாவைத் திட்டிகொண்டே… பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிக்கொண்டே, காசில்லாமல் கஷ்டம் கசியும் கணவன் கண்ணனின் கைகளில் மிச்சம் பிடிச்ச பணம்… Continue Reading →

20

வழித்தடத்து புற்கள்

வழித்தடத்தில் வளர்வது இரண்டு சென்ம பாவங்களை சேர்த்து பிறப்பது போல.. கால்நடைகள் கடித்து சென்றது போக.. அடுத்த மழை வரும் வரை உயிரை தக்க வைப்பது அசாதரண யுத்தம்.. கஞ்சத்தனமாய்.. இலைகளுக்கு உணவு செய்து காப்பாற்றி வைத்த பின்னும்.. தலைமேல் ஏறிச் செல்லும் வாகனங்களின் அழுத்தம் நீக்க.. மூச்சடக்கி மேல் நோக்கி நீருள் எழும்பும் நுரையீரல்… Continue Reading →

3

பூனைகள் – வாசகர் கவிதைகள்

பூனைகள் ராவோடு ராவக மதங்களின் அடிப்படையில்உணவினை பிரிப்பர் ஒருநாள், கரும்பு கொண்டு வரும் சிவராஜூம்வர போவதில்லை ! பிரியாணி கொண்டு வரும் அஹமதும்இருக்க போவதில்லை ! கேக் எடுத்து வரும் ஆண்டனிகளும்மிஞ்ச போவதில்லை ! அக்கிரகாரத்து பூனைகளுக்கும், கறிகடை பாயின் பூனைகளுக்கும், கண்களை மூடாமலேயே உலகம் இருட்டி இருக்கும் ! –அஹமத் இப்ராஹிம் தென்காசி ———–… Continue Reading →

18

இருளுக்கு பழகிய விழிகள் – வாசகர் கவிதைகள்

இருளுக்கு பழகிய விழிகள் செவிக்கொண்டு பலர் துயர் பார்க்கிறேன். மனம் கொண்டு அவர் துயர் உணர்கிறேன். இருள் பழகிய என் விழி வேண்டுமோ கண் கொண்டும் காணாமல் வாழ்வோர்க்கு? இருள் என்பது விழியின்மை அன்று! இருள் என்பது மனமின்மை.. இருள் என்பது மதியின்மை.. இருள் என்பது மனிதமின்மை. புறக்கண் உண்டு உனக்கும் புழுவிற்கும் , உன்… Continue Reading →

24

மழை ஒரு கானல்‌ நீர்‌

மழை ஒரு கானல்‌ நீர்‌ மேகங்களின்‌ ஊடல்கள்‌ மிருத்தியம்‌ செய்த பாக்கியம்‌! கார்நங்கை கலாபம்‌ பூட்டிய காலம்‌! வேளாண்மை வன்மம்‌ கொண்ட காலம்‌! புதுநெல்‌ வறுநகை பூத்த காலம்‌! கமஞ்சுல்‌ எட்டிப்பார்த்த நிலமெல்லாம்‌ மான்மியம்‌! இடியென்ற சலங்கையோடு வருகை தந்து; மின்னல்‌ மிடுக்கோடு நடனமாடி; கார்மேகம்‌ கட்டிய சீலையும்‌ காற்றோடு கதை பேசும்‌ லாவண்யம்‌ காண்பாய்‌!… Continue Reading →

33

மாய வாழ்வு – வாசகர் கவிதைகள்

மாய வாழ்வு ஏதும்‌ எனதன்று… எல்லாம்‌ மாயை…! கூடும்‌ எனதன்று….கூத்தாண்‌ செயல்‌… பாடும்‌ புகழ்‌ கொண்டு அறிவார்‌ – கீர்த்தியை… பண்போடு வாழ்ந்தார்‌, ஆடும்‌ நாளில்‌ ஆசைக்கினங்க ஆற்றும்‌ காமம்‌. அடங்கும்‌ நட்களில்‌ செய்த தாமம்‌ தவிர்த்து – வருத்தும்‌ ! ஆண்டானும்‌ அடியேனும்‌. ஆறடி நிலத்திலே – பொருந்தும்‌…… — சிவராஜ்‌ மணிவண்ணன்‌ வேலூர்… Continue Reading →

5

கருணைகொள் கரோனோவே – வாசகர் கவிதைகள்

சீனதேசத்து வானவளியிலே சீக்குப்பரப்பியைச் சிதறியதாரோ? ஊகான்மாகாண உயிர்வளிதனிலே உயிர்க்கொல்லியை உதறியதாரோ? வேகமாக வளர்ந்துவிட்டோம் விஞ்ஞான அறிவினிலென்ற மோகத்தில் நாங்களெல்லாம் மூழ்கித் திளைத்திருந்தோம் காற்றினில் நோய்பரப்பி நூற்றுக்கணக்கில் உயிர்குடிக்கும் கரோனோவே உன்முன்னால் கர்வத்தை உடைத்தெரிந்தோம் நாசிக் காற்றில் நச்சைக் கலக்கும்முன் யோசித்துப் பார்த்தாயா ஒற்றை நிமிடம் முந்நீர்சூழு் பூமிக்கே முகக்கவசம் தைப்பதற்கு மண்ணில் இல்லைஎந்த மலிவுவிலை கடையும்… Continue Reading →

3

சமத்துவம் – வாசகர் கவிதை

தென்கடல் தீண்டிய தென்றலது, இளம் பூவுக்குள் புகுந்திங்கு போகுதடி!! எந்த பூவுக்கும் பாரபட்சம் இல்லையடி!! வண்ணத்திரு எழில் வையகத்துள்-பல நீளக் கதிர்களும் வீசுதடி!! இதில் நிர்க்கதி யாருக்கும் இல்லையடி!! கான குயிலோசசை உணரும் காதில் -ஒரு காதல் இன்பம் ஊறுதடி!! இதில் வயது வரம்பு இல்லையடி!! நீலக் கடலலை வீசிவந்து-எங்கும் நிற்கும் காலைக் கூசுதடி!! இதில்… Continue Reading →

143

என்ன செய்யும் எழுத்து

என்ன செய்யும் எழுத்தென எண்ணிப் பார்த்தேன் எண்ணியதன் முடிவில் ஒன்று தெளிந்தேன் – நமை எண்ணச் செய்வதே எழுத்தென்பதறிந்தேன் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமெனில் கண்ணைக் காப்பதே கலையின் பெருமை பெரியாரின் எழுத்து சுயமரியாதை பேசும் அண்ணலின் எழுத்தில் சமூகநீதி இருக்கும் பகத்சிங்கின் எழுத்தினிலோ புரட்சி இருக்கும் பொதுவுடைமை பேசுதற்கு மார்க்ஸின் எழுத்து வரும் அண்ணாவின்… Continue Reading →

4

அலமாரி எங்கும் அறிவு

அறியாமை இருளுக்கு ஆதித்ய ஒளியூட்டி அறிவுக் கேணிதனை அழகுறத் தூரெடுத்து வறியோனும் வித்தகனாய் வாழ்வாங்கு வாழ்ந்திடவே வரமாய்க் கிட்டிய விருட்சமன்றோ நூலகம்! கலாச்சாரப் பறைசாற்றும் இலக்கிய வேர்துவங்கி கணிப்பொறிக் கதைசொல்லும் காலக் கிளைவரை பலாயிரம் நூல்களைப் பதுக்கியுள்ள பொக்கிஷம் பயனுறப் பழகிட்டால் வெற்றியது நிச்சயம்! விழிப்புணர்வு ஒளிதேடி வேறெங்கும் போகாதே வாழ்ந்தோரின் வரலாறு வாசித்திடு வந்திறங்கும்… Continue Reading →

1

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்