The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

tamil

நானும் எண்ணமும் வரிகளும்

எண்ணங்களை மட்டும் கொண்டு எழுத்துக்களை வடிக்கிறேன் அதன் வடிவங்கள் எப்போதும் அமைதியாய் அன்பாய் எனை நோக்கும் காலத்தின் மாயைகளில் கொண்ட களி வடிவம் பெரிதும் மாறாமல் ஏனோ நோக்கங்கள் மாறுவதினால் அதன் தாக்கங்கள் கூடுகிறது மார்பில் கனத்திருக்கும் மணித்துளிகளை சேகரித்து வரிகளில் திணிக்கும் போதுதான் எழுத்துக்கள் சங்கமமாகிறது அச்சங்கமத்திலே நான் வாழ்கிறேன் உறைந்து காய்ந்த கரு… Continue Reading →

3

இலை விழும் துளியொன்று

இலை விழு துளியொன்று கனத்து நுனி வந்து நுனி யதன் அரவணைப்பில் சற்றே மேனிப் பருத்து – கீழ் நோக்கி மெல்லியவளின் கன்னம் விழ மெல்லியவள் நளினம் கொண்டு துளியதை துடைத் தெறிய துடைத்தெறிந்த துளியது பெண்மையவள் கூந்தலுரசி சிதற பரவியது ஈரப்பதம் நதியதன் கரையோரம் கொண்டதொரு ஓசை போல் சிலிர்த்தது கானங்கள் துளியது கூட்டத்துடன்… Continue Reading →

0

காதலாகிறேன்

எழுகின்ற வேலையில் விடியல் தந்த குளிரில் போர்வைக்குள் காதலாகிறேன் மழை பெய்த நேரத்தில் முழுதாய் நனைந்திருந்த சாலையில் காதலாகிறேன் தூரத்து மேகத்தை அழைக்கின்ற காற்றுடனே மெல்லிய மண் வாசனையில் காதலாகிறேன் யாரென்று தெரியாமல் எனைப் பார்த்து சிரிக்கும் அக்குழந்தையால் காதலாகிறேன் உச்சி மலை அழகினில் வெண்மை விழும் அருவியில் சில்லென்ற காற்றில் காதலாகிறேன் சாலையோர நடையில்… Continue Reading →

0

யாரும் அறியார் பெண்ணே

யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →

0

வார்த்தைகளுடன் ஓர் வாக்குவாதம்

வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம் அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில் உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன் இலக்கணம் அறிகுவாயோ ? ஏதோ… Continue Reading →

0

இவர் நல்லவர் தான்

நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார்  நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார்  இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார்  உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும்   பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் … Continue Reading →

0

நசுக்கப் பட்டவை எழும் போது ?

உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம் தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும்… Continue Reading →

1

கவிதை யாதெனில்

இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து இதம்தரும் வீணை இசையது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை புத்துயிர் இயற்கையின் வற்றாத… Continue Reading →

0

தாய்

உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள் முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள் நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன் கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள் கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்… Continue Reading →

0

​ஜதிகளின் நுட்பம்

ஜதிகளின் நுட்பம் மலர் பாதங்களினூடே – இமை கூர்மையில் நெளிகிறது நளினத்தின் நயங்கள் மங்கை இடைச் சொல்லும் – வழியே அசைவினில் துளிர்கிறது சுடர்களின் கதிர்கள் தண் முகமதில் கொட்டிட்டே – கன்ன சிவப்பினில் மிளிர்கிறது விழித்திரையின் காட்சிகள் யாவும் நினைவு தட்டும் – உயர் புதினத்தில் ஒளிர்கிறது கொட்டும் தாளங்கள் நின் சலங்கை பண்ணூடே… Continue Reading →

0

© 2019 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்