ஜதிகளின் நுட்பம்
மலர் பாதங்களினூடே – இமை
கூர்மையில் நெளிகிறது

நளினத்தின் நயங்கள் மங்கை
இடைச் சொல்லும் – வழியே
அசைவினில் துளிர்கிறது

சுடர்களின் கதிர்கள் தண்
முகமதில் கொட்டிட்டே – கன்ன
சிவப்பினில் மிளிர்கிறது

விழித்திரையின் காட்சிகள் யாவும்
நினைவு தட்டும் – உயர்
புதினத்தில் ஒளிர்கிறது

கொட்டும் தாளங்கள் நின்
சலங்கை பண்ணூடே  – கலந்த
தனால் வீணை நகைக்கிறது

செவி மட்டும் எட்டும் ஒலி
சிந்தனை தழுவாமல் -நிந்தன்
அசைவு கண்டு விலகுகிறது

அணி வகுக்கும் நடனத்தின்
பாவனைகள் யாவும் – அந்த
கலை மகளின் பாதம் தழுவுகிறது

என்னென்று சொல்லாமல் நானும்
நில்லென்று நிலையா – நின்
பாதமும் இனிதே இவ்விடம் சங்கமமாகிறது.

47