உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை
வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை
இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை

உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள்
முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள்
நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன்
கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள்

கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்
செந்தமிழ் புகற்றினள் செறிவுடன் வளர்த்தனள்
கனிதரும் சுவையினள் கருமுகில் பண்பிணள்

ஈகையின் உருவினள் ஈர்த்திடும் குணமினள்
கவின்மிகு அழகினள் கள்ஒத்த பாசம் தருவினள்
குடிலின் அரசியவள் குன்றாத சிறப்பினள்
வான்வழி பொழிந்திடும் வளமான மழையவள்

எந்நிலை மாறினும் அவள் உளம் மாறினள்
கொண்ட பாசத்தின் தன்மை மாறினள்

அத்தகைய,

தாய்மையே உருவே சக்தியாய் எங்கும் நிலைத்திட
நின்னடி தொழுதே என் பொழுது கழிந்திடல் வேண்டும்

எனவே,

இறையே ! என்னுயிர் கொண்டு ஈங்கு அவள் உயிர் !

0