முல்லை நிலத்தினிலே யாங்கு வீரம் செறிந்திருக்க தமிழ் மானம் ஊறியிருக்க – உடன் மரபு அதன் அடையாளம் பரவியிருக்க துடித்திடும் மீசையுடன் ஆங்கு என்குல இளைஞர்கள் பொழுதுபோக்கிலும் இயற்கை இயைந்திருக்க சீறிடும் காளையை கையாலும் எங்கள் வீர விளையாட்டடா எதிர்ப்பவன் என் முன் வந்து நில்லடா ஏதடா நீ அறிவாய் தரணியை ஆண்டவர்கள் நாங்கள் ஏறு… Continue Reading →
1ஏன் ஏனோ அந்த தருணம் மனம் முழுதும் படரும் ஓர் உணர்வு நீ நீயோ அந்த சாலை தனை கடந்தாய் முகம் முழுதும் உடன் கன்னி சிரிப்பும் பார் பார்க்கும் ஓர் அழகை இரு விழியில் கொண்டாய் – முழுதும் அதில் கரைந்தேன் முதலில் ஏன் ஏனோ அந்த தருணம் சில வார்த்தை வர மறுக்கும்… Continue Reading →
30உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள் முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள் நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன் கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள் கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்… Continue Reading →
0பல நிறத்தவன் வாழும் உலகினில் ஒரு நிறத்தவன் நாணாத போது கைக் கூசாமல் வாங்கிய போது இடம் தெரியாமல் மறைத்த போது மற்றவன் விழிப் பிதுங்க இருந்த போது இன்னொருவன் ஏதும் செய்யாமல் பார்த்த போது அடக்க வேண்டியவன் அடங்கியிருந்த போது அட போங்கய்யா மாறும் மாற்றமும் மாறாதது. #blackmoney #demonetisation
0பார்பவையற்றை யெல்லாம் எழுதிட வேண்டும் – அவை பாவையின் முகமதி போல் இருந்திடல் வேண்டும் துயில் களைந்து எழுந்து முகங்கழுவி தெளியுமுன் – அவள் துஞ்சு முகம் நெளித்த சோம்பலை எழுதிடல் வேண்டும் இதழ் தந்த சொற்கள் யாவும் அப்படியே வேண்டும் – எழுது கோலும் நெளிந்து சிவக்கும் வண்ணம் அவை இருந் தெய்திடல் வேண்டும்… Continue Reading →
22ஜதிகளின் நுட்பம் மலர் பாதங்களினூடே – இமை கூர்மையில் நெளிகிறது நளினத்தின் நயங்கள் மங்கை இடைச் சொல்லும் – வழியே அசைவினில் துளிர்கிறது சுடர்களின் கதிர்கள் தண் முகமதில் கொட்டிட்டே – கன்ன சிவப்பினில் மிளிர்கிறது விழித்திரையின் காட்சிகள் யாவும் நினைவு தட்டும் – உயர் புதினத்தில் ஒளிர்கிறது கொட்டும் தாளங்கள் நின் சலங்கை பண்ணூடே… Continue Reading →
47விரல் கொண்டு இசைத்தாயோ என் உயிர் மயங்க செய்தாயோ நித்திரையின் நாடகமோ புதிர் போடும் காவியமோ இசைந்திடாத உயிருண்டோ அசைதிடாத ஜடம் உண்டோ கசிந்திடும் நீரை போல் உயிரை சொட்ட சொட்ட பிடித்து புல்லாங்குயலின் விட்டாயோ… ! உறைகின்ற நீரும் ஓர் நாள் கரைந்திடும் மறவாது ஒரு நாளும் உன் முகம் கண்ட என் மனது… Continue Reading →
15நித்தம் ஒரு மலர் பறித்து கசங்காமல் நூலில் கோர்த்து வாடும் தனை முன்பே கணவான் நின் மாலையாய் சூட தினம் நீரது கொண்டு செழிக்க உயிரது வேருன்ற வெய்யோனின் கதிர் படர வளர்ந்தது இந்த மலர் செடியே பசுமை நிறைந்திருக்க வந்து பறிக்க பலர் இருக்க நின் மார்போடு தழுவி மகிழவே மலர்களை உதிர்க்க செய்தது … Continue Reading →
0வசந்தத்தில் பிறந்தவனே எனை மழைநீராய் நனைத்தவனே துளித்துளியாய் மேனிப்பட்டு சட்டென்று இறங்கியவனே விடியல் பொழுதைப்போன்றே பகலெல்லாம் மாற்றி – புது பார்வையில் நின்றவனே…. குளிரென்ற பெயராலே – உன் தோள் மீது நான் சாய என் அருகிலேயே இருப்பவனே … தனியாக மழை நீரை இரசிக்கிறேன் புரண்டோடும் ஓடையாய் – உன் இடம் நாடி வருவேன் … Continue Reading →
7வெறும் கையில் முகம் மறைத்து நிலவே உனை காணாமல் முட்தரையில் புரளுகிறேன் விலகிவிடு என்று ஒரு வார்த்தையில் உனை கூறிவிட்டு – ஒவ்வொரு நொடியும் கண்ணீர் வடிக்கிறேன் உடைந்த பொம்மையை எறிய மறுக்கும் குழந்தைப்போல் – நம் நினைவுகளை புதைத்து வைக்கிறேன் பரந்த வானத்தின் வெண்மேகத்தை இமைக்காமல் பார்க்கிறேன் இருள் வந்து சேர்ந்து – மின்னும் … Continue Reading →
4