​நித்தம் ஒரு மலர் பறித்து 

கசங்காமல் நூலில் கோர்த்து 

வாடும் தனை முன்பே 

கணவான் நின் மாலையாய்  சூட 
தினம் நீரது கொண்டு செழிக்க 

உயிரது வேருன்ற 

வெய்யோனின் கதிர் படர 

வளர்ந்தது இந்த மலர் செடியே 
பசுமை நிறைந்திருக்க 

வந்து பறிக்க பலர் இருக்க 

நின் மார்போடு தழுவி மகிழவே 

மலர்களை உதிர்க்க செய்தது 

இந்த பூஞ்செடியே …!
வீற்றிருக்கும் சிம்மாசனம் புகழ் மணம் 

பெருக்கவே வந்து சேர்ந்தது 

இந்த மலர் காவியமே ..!
இருள் மூழ்கி சூழ்ந்திடுமே 

வாடி தான் போய் விடுமே – நின் 

கழுத்தினின்று இறங்கும் போது 
தங்கள் முகம் கண்டு மயங்கிய 

வெண்மதியின் விளக்கங் கேட்டு 

பூத்திடுவேன் மறுபடியும்  உன் 

இடம் சேர – கதிரவனின் 

வருக்கைக்கு முன்னே …!

0