தென்றலின் இளையவளை தேடிவரும் வேந்தன் எவனோ!
சிலிர்க்கின்ற மேனியவளின் சிந்தை கொள்பவன் எவனோ!
நலின இடையவளின் கரம் கோர்ப்பவன் எவனோ!
மின்னல் பார்வையவளின் கார்மேக கண்ணன் எவனோ!
திறம் கொண்ட விரல்களால் இவ்வீணையை வாசிக்க வருபவன் எவனோ!
நங்கையவள் மேனி மேற்படரும் மெல்லிய ஆடை எவனோ!
மயக்கும் இவள் விழிகளை கவரும் கந்தர்வன் எவனோ!
நிலம் பார்த்து நடக்கும் இவள் கண்கள் – அவன்
திடம் கண்டு நாண இரு கைகள் கோர்த்து நடக்கும்
திருநாள்தான் என்றோ!
மாதவியை நாடா கோவலனாய்
சீதையை அக்னியிடா இராமனாய்
இரு இடம் கொள்ளா வேலனாய் – அவன்
வருவானோ!
பார்ப்பவர்கள் இச்சைக் கொள்ளும் சிற்பமிவளின்
உரிமையாகுவன் எவனோ!
சிறமேறிருக்கும் மென்பூவும் பெருமைக் கொள்
மங்கையின் மணாளன் எவனோ!
உடையவன் எவன் என்று நாணி உருண்டோடும் – இவள்
விழிகேள் வினாக்களின் விடைதான் எவனோ!!!
0
உங்கள் கருத்தினை பதிவிடுக