கடந்து போக கண்டேண்
மெல்ல நடந்து போகும் பெண்ணவளின் பாதம்தனை கண்டேன்
விழி நிறைந்த பாதங்களை நிழல் தொடரக் கண்டேன்
கருமை நிழலதிலே காலம் கரைந்திடவும் கண்டேன்
எண் திசையில் அவள் திசையே என் திசையென உணர்ந்தேன்
அத்திசையை நாடுகையில் அவள் குழல் வேக மறையக் கண்டேன்
குழல் தந்த மணத்திலே திசை நீண்டு வளர
நீண்ட அந்தப் பாதியிலே என்னடிப் பாதம் ஓடக் கண்டேன்
அடி அடியாய் அவள் பாதச் சுவடு அதன் மீது என் சுவடு படிய கண்டேன்
படிந்தவை முடியவே என் கால்கள் நிற்க கண்டேன்
நின்ற அந்தப் பதுமையும் முகம் திரும்பாமல் இருக்க கண்டேன்
நீர் விழுந்த ஒருவன் உயர்த்துகின்ற கரம் போல
மாலை நேர பிரிகையிலே வெய்யோனின் கதிர்கள் உயர்ந்திருக்க
செந்நிற கதிர்கள் பட்டு சிவந்திட்ட கன்னங்களை காட்டாமல் நின்றிருந்தாள் – எனை
பாராமல் நிலைத்திருந்தாள்.
0
உங்கள் கருத்தினை பதிவிடுக