வசீகரமானவள்! மல்லிகை!

தயவற்ற கூர்முனைகள்
தன்னுள் பாய்ச்சப்பட்டப்பொழுதும்
உடலைக் கிழித்து
ஊடுருவும் ஒருநூலால்தான்
தூக்கிலிடப்படுவது அறிந்தும்
தன்பிறவி பணியென
மலர்வேன்… மணப்பேனென…
இன்னும் புன்னகைக்கிறாள்!

அகிலா .ஆ
திருப்பூர்



தெரு பாடகன்

நள்ளிரவு 
நெடுஞ்சாலை மத்தியில் 
இரத்தக்கலவையின் 
மொத்த உருவமாய் 
ஓர் உயிர் … 
தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் ? 
அருகில் சுடுகாட்டு வாசனை ?

குணசேகரன்,

திருப்பூர்

பெண்ணும் பேனாவும்

நெஞ்சில் நிற்பதிலும் நாணித்தலை குனிவதிலும்
நிறைந்த பொருளை நிறுத்திக் காப்பதிலும்
கொஞ்சந் தவறும்போது கோலால் அடிப்பதிலும்
கைக்குள் இருப்பதிலும் கசிந்திடும் மையினிலும்
தஞ்சம் புகுந்தவுடன் தான்தேய உழைப்பதிலும்
தம்மவர் பேர்காட்டி தரணிக்கு உரைப்பதிலும்
பிஞ்சுக் கைகளில் பொம்மை ஆவதிலும்
பெண்ணும் பேனாவும் பொருந்தக் கண்டேன்

– நாகேந்திரன்
விருதுநகர்



௧ிராமத்து ஏழை ௮ழகியின் ஒரு நாள் பொழுது


குடிசையின் துளையிலே
           குறுங்கதிர் ஒளியிலே
௮ழகி ௨னை ௭ழுப்ப
           ஆகாயச் சூரியன் வருகுதடி

மெழுக்கா நெலிப்பெடுத்து
         மெல்லிய கூந்தல் முடிஞ்சி
மினுக்கா நீ நடக்கையிலே
            மண்புழுவுக்கும் நோகலடி

 பாட்டிக்கிட்ட பாட்டு வாங்கி
         படும்சோம்பேறி பட்டம் வாங்கி
சிலிப்பிக்கிட்டு நீ போகயிலே
          செம்பருத்தி பூ சசிரிக்குதடி

 கோபத்தோடு நீ பறிச்சி 
      கொண்டையில் சொருகையிலே
தாய்மடி கண்டது போல் செம்பருத்தி
       தன் தலை சாய்த்து தூங்குதடி

பத்து மணிக்கு பல் தேச்சி
          பழையத பருக குடிச்சி
நீ வறட்டி தட்டும் சாணியெல்லாம்
          சந்தனமா மாறுதடி

பச்ச வயல் ஒரத்துல
          ௨ச்சி வெயிலில் நீ நடக்க 
௨ருவாகும் வியர்வை துளி
           ௨ன் ௨தட்ட தேடி ௮ழையுதடி

சாயங்காலம் வேலையிலே
          பசு மாட்டை ஓட்டிக்கிட்டு
நீ நினைச்சதெல்லாம் பாடுறத
           நீல வானம் ரசிக்குதடி

 ௧ாணத நோய் தாக்கி
       கடந்துவிட்ட ஆத்தாள் ௮ப்பனையும்
திருப்பித்தானு நீ கேட்க
      கல்சிலை கூட கலங்குதடி

மண்ணா போச்சி வாழ்க்கை ௭ன
         மனசே வெறுத்து போனாலும்
மாப்பிள்ளை ஒருவன் வருவான் ௭ன 
         மறுநாள் காலை தொடங்குதடி

ச.மாரிமுத்து,
நாகப்பட்டினம்

 

4