​புன்னகையின் பொருளோடு புவிதனில்

நீ வந்தாய் – சிற்பியின் உளியெல்லாம்

உன் கதை பேசின

இமையாடும் இடையாடும் வளையாலாடும்

இசை கேட்டும்  – நடனங்கள்

மானிடரின் கலையாயின

புயலொன்று புலம்பெயர்ந்து உன்

பாதத்தில் குடி கொண்டு – வழியெல்லாம்

கண்டோரை வேரோடு சாய்க்கிறது
மன்மதனின் நிழல் கண்டு 

ஒதுங்காத பெண்களுண்டு – உன்

மூச்சை சுவாசிக்க தவம் கொள்ளா ஆண்களில்லை
நின் கருவிழியில் சிக்குண்டு

காவியங்கள் படைத்திட்ட கவியர்கள் பல உண்டு

தான் ஒருவன் ரசித்தது போதுமென்று

உனக்கு இயற்கையென்று பெயரிட்டான்

உயிரில்லா ஓவியமென்றான் – பெண்ணை

வர்ணித்தான் நின்னை துணைவைத்து
இறைப்பொருள் நீயே – நின் இசை

பாட விழைவேன் நானே 

20