கருவில் உரு கொண்டு வெளி கொணர்ந்த – அந்நாளில்
இவள் தான் உன் பிரம்மம் என காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம்

சிறு பிஞ்சு விரல் கன்னங்களை கிள்ளி விட்டு – என்
போட்டியாய் வந்தவனே என கோப அன்பையுணர்த்திய – என் பிரம்மத்தின்
கருவறையை என்னுடன் பகிர்ந்தோரை காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம்

அடியெடுத்து வெளிவந்து புதிய ஓர் உலகை பார்க்கையிலே – கைப் பிடித்து அழைத்தோடும் நட்பினை காட்டிட்ட
அக்கண்களுக்கென் முத்தம்

வீதி உலா செல்கையிலே கண்பட்ட மலரையெல்லாம் கிளர்ச்சியுடன் இரசித்து விட்டு உரிமையுடன் பரித்து செல்ல தாயொத்த பண்பை தேடும் அக்கண்களுக்கென் முத்தம்

இளந்தளிர் முகமவள் களிப்புடன் எனை தொடர்கையில் காண்பதெல்லாம் அழகாக்கும்
கனவுலகாய் நிஜம் படைக்கும்
அக்கண்களுக்கென் முத்தம்

குளித்து கூந்தல் முடிந்து அவள் செல்லுமுன் வாசல் தெளித்திட்ட வைகறை மழைச் சாரலை பாதம் குவித்து கன்னம் தெளிக்க காட்டிட்ட
அக்கண்களுக்கென் முத்தம்

மலையை மலரை மழலையை
நதியை ரதியை மதியை
இரவை
பனியை
கார் மேகத்தை

என்றும் வியத்திடும் இயற்கையை – காட்டிட்ட
இக்கண்களுக்கென் முத்தம்

0