​துயில் களைந்த வேளையில்

காகங்கள் கரையும் இசையில் 

மெல்ல திறந்த இமைகளுடன்

நாற்திசை பரவிய முடிகளுடன்

சோம்பலை முறித்தெழுந்தேன்
சட்டென்று புன்னகைத்தேன் 

சற்றுமுன் மறைந்த கனாவை எண்ணி
நீண்ட நெடும் சாலையிலே 

அந்தி சாயும் வேளையிலே – நம்

பாதொலிகள் மட்டும் திசையெங்கும் தெறித்தது

கீச்சிடும் கானம் தரும் குருவிகளின் திட்டப்படி

மௌனங்கள் விழுந்தன 

நம் பார்வையில் கரைந்தன

இருவர் உலகமாய் படைப்புகள் தெறிந்தன

நம்மொருவர் உள்ளத்தில் சலனமின்றி ஓடின

நாணத்தின் பிடியிலே கைகள் மறுக்க – உன்

கண்கள் தாராளமாய் என் கண்களை கட்டி தழுவியது – புது மின்னல்கள் பிறந்தது
பூத்திருக்கும் வனத்தினிலே புகழ் 

மணம் இல்லையென்று – உன்

பெயர் சூட்டினேன் இன்று 

பறவைகள் சரணாலயம் பிறந்தது
ஆ …!

நிறைவடைந்த கனாவை நித்தமும் காண்கிறேன்

நின் பார்வை ஒளி வேண்டி ….

1