எட்டி உதைக்கிறான் மகன்
எதிர்த்துப் பேசாதே என்கிறாய் நீ
வலிக்க புரள்கிறான் மகன்
வருடிக் கொடுக்க மறக்கிறாய் நீ
வலிமையாய் முட்டுறான் மகன்
அமில வார்த்தைகளால் திட்டுகிறாய் நீ
மூச்சுத்திணற வைக்கிறான் மகன்
மென்மையாய் பேச மறுக்கிறாய் நீ
மொத்தமாய் சோர்வுறச் செய்கிறான் மகன்
சுத்தமாய் கண்டு கொள்வதில்லை நீ
இரண்டுமே வலித்தாலும்
ஒன்று உடலையும்
மற்றொன்று உள்ளத்தையும்
ரணமாய் கிழித்தாலும்
எதுவுமே நடக்காதது போல்
இயல்பாய் இருக்கப் பழகிக்கொள்கிறேன்!

எப்படியும் ஒரு நாள்
இரண்டு தெய்வங்களில்
ஒன்றாவது கண் திறக்கும்
என்ற நம்பிக்கையோடு!

காயத்ரி
சென்னை

0