வேரிட்டு முளைக்கும்
பயிர்கள் எல்லாம்.,
செங்கதிர் விரல்பட்டு.,
செருக்கடைகிறது..
செந்தமிழே.,
என்னை தீண்டியது என..
சேலைக் கட்டிய
சேதி கேட்டு.,
சீவகனுக்கும்
மீட்ட ஆசை..
மின்அதிரும் மேனியை..
இதழ் சுழித்து
விழி அசைக்கயில்
வரம் கேட்டு
வாதிடுகிறான்.,
வாசுகி மைந்தன்..
வாளோடும் கோலோடும்
போரிட செல்லும் முன்னே.,
பேதை என்னை
போதை கொள்ள வைத்தாயடி..
கனியாகிய பூ உன்னை
காயாக்கி.,
பின் தாயாக்கி.,
மோகத்தில் மேகம் தொட்டு.,
வேட்கையில் யாகித்து.,
யோகத்தால் புசிக்க போகிறேன்..
வேகத்தில் கட்டியணைத்தால்
கண்டதெல்லாம் கனவு..
கள்ளியிடம்
களவியலும் இல்லை.,
கலவியும் இல்லை..
எள்ளி நகையாடுகிறது.,
எத்தனிக்கும் என் நெஞ்சு..
-இலக்கிய மார்ச்சனா
திருநெல்வேலி
5
உங்கள் கருத்தினை பதிவிடுக