கேளாய்….
வறியோனே..!
கேளாய்…..
வல்லோன்
அவன் கூற்றை – வாய்பிளந்து
கேளாய்…..
இதோ…!
சாமானிய பெருமக்களே….!
சத்தம் போடாதீர்கள்….
விவசாய பெருங்குடிகளே…!
விவாதம் பண்ணாதீர்கள்…..
வீதி வரை
வந்தால் – மட்டும்
விடிந்திடுமா…! என்ன…?
தொண்டை கிழிய
கத்தினால் – மட்டும்
முடிந்திடுமா…! என்ன…?
மச மசவென
நிற்காமல்…..
மசோதா வருகிறது…
மண்டையை ஆட்டுங்கள்……
நச நசவென
நச்சரிக்காமல்….
காட்டி இடமெல்லாம்
கையெழுத்து போடுங்கள்….
பத்து சதவீதம்
மானியம் தருவோம்…..
” வாழிய…! வாழிய…! ” என்றபடி
வாங்கி செல்லுங்கள்…..
பயிரும்
நாங்களே தருவோம்…… பருவமழை
பொய்த்தாலும்…..
பக்குவமாய்
பயிரிடுங்கள்…..
” விதை நெல் கிட்டும் என
வீண் கனவு காணாதீர்கள்..”
உரம் தருவோம்….
உயிரை பறிப்போம்…..
விளைந்து விட்டால்…..
சொல்லிவிடுங்கள்……
விரைவு வண்டிலாவது
வந்திடுவோம்…….
விதைந்தது…
நல்லதா…? கெட்டதா…?
தொண்ணூறு
நாட்களுக்கு பிறகு
தோனுவதை
சொல்லுவோம்…..
பெற்றது நீயானாலும்…..
கூணா….! குருடா….!
நாங்கள்தான்….
தீர்மானிப்போம்…….
என்ன…? விலை
நீ சொன்னாலும்….
கொடுப்பதை வாங்க வைத்து
கும்பிடும் போட வைப்போம்….
பத்து ஆண்டுகள்
பொறுத்திருங்கள்….
பட்டா சிட்டா
எல்லாம் பவ்வியமாய்
தந்திடுங்கள்…..
விளை நிலமெல்லாம்….
வித்த பின்னே……..
விஷம் குடித்தாவது
செத்திடுங்கள்……..
நீதிமன்றம்
போகலாம் – என்று
நினைக்க வேண்டாம்….
நியாயமும்….
தர்மமும்…..
கிடைக்கும் – என்று
யூகிக்க வேண்டாம்…..
நீதி தேவதையின்
கண்களை…….
கால் நூற்றாண்டுகளாய்…
கட்டி தான். வைத்திருக்கிறோம்….
கருணை பார்வை
கிடைக்குமென்று – கற்பனை; செய்யவேண்டாம்…….
வாய்க்கு
ருசியாய் அரிசி தந்த உங்களுக்கு…..
வாய்க்கரிசியை தவிர
வேற என்ன…? தரமுடியும்….
“வந்தே பாரதம் சொல்வோம்….
வயிறு பசித்தால் மண்ணை
திண்போம்…..”
– இசக்கி முத்து லெட்சுமணன்
திருநெல்வேலி
November 26, 2021 at 5:42 am
நன்றி சகோதரர்… சிறந்த கவிதையாக என் கவிதையை தேர்வு செய்தமைக்கு