இன்னிலை இன்பம்

உட்கொண்டு உள்ளம் வளர்த்தேன்
உருகி பருக உயிர்கள் இல்லை,
உயிரா உடலா எதைநான் ௯ற
உயிரை கொஞ்சம் உடலை கொஞ்சம்
மொய்த்து திண்ணும் மனித ௯ட்டம் ..!

– மனோ ராஜேஷ்
மன்னார்குடி, திருவாருர்

கேட்ட குரல்

எங்கிருந்தோ கேட்கிறது
என் மனதின் குரல்!

நான் அழும் போதெல்லாம்
என்னை வாரி அணைத்தது!!
இன்று தூரமாகநின்று
சமிக்ஞை செய்கிறது!!!

என் மூளைக்குள் வலி!
தொடர்ந்து இம்சிக்கும்
மௌனம் மொழியின்
அர்த்தத்தை அகராதியில்
தேடுகிறேன்!!!

தோற்றுக் கொண்டே
போகிறது சிந்தனையின்
பார்வை!! சில சமயம்
சிந்திக்கவே மறுக்கிறேன்!!

இடைவிடாது துடிக்கும்
இதயத்திற்கு இடையில்
சிக்கித் தவிக்கிறது
சிக்கலான வாழ்க்கை!!!

துண்டு பிரசுரங்களை
தேடி அலைகிறேன்!
விநியோகிக்க
விழி நீரை அழைக்கிறேன்!!

கடந்து வந்த பாதை
இருண்டு விட்டது!
அடுத்த அடி
கல்மீதா? முள்மீதா?
தெரியவில்லை!!!

விடாது துரத்தும்
கேள்விகள் என்னை
விழுங்கிவிடுமோ
என்ற அச்சம்!!!!

விடுவிக்கும் விரல்களும்
பிணைக்கப்பட்ட நிலையில்!
விடுதலை வேட்கை!
வெறி கொண்டு
அலைகிறது!!

இரவினை கடந்து
நீள்கிறது நிதப்தம்!!
இடைவிடாது அடித்து
பெய்த மழையில்
துவண்டு போன
நாய்க்குட்டி ஆனேன்!!

தொலை தூரத்தில்
வெளிச்சம் ! தொட்டுவிடவே
துணிகிறேன்!! பாதை
நீண்டு கொண்டே போகிறது!!!!

– லலிதா
காஞ்சிபுரம்

7